இந்தியாவிற்கு சான்ஸ்.. ரஷ்யாவில் மேலை நாடுகள் கிளம்பிய இடத்தில் கொடி நாட்டலாம்.. ரஷ்ய தூதர் அழைப்பு
கீவ்: ‛‛ரஷ்யாவில் இருந்து வெளியேறும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களின் இடத்தை இந்தியா நிரப்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக மருந்து நிறுவனங்கள் அதிகம் இடம்பெறலாம்‛ என இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் டெனிஸ் அலிபோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
இந்த நாடுகள் ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுதம், பண உதவி செய்து வருகின்றன. இதனால் ரஷ்யாவும் கோபமடைந்துள்ளது.

தொடரும் போர்
இதனால் பிற நாடுகளின் உதவியை பெறாமல் சரணடைந்தால் போரை கைவிடுவதாக உக்ரைனிடம், ரஷ்யா கோரிக்கை வைக்கிறது. ஆனால் உக்ரைன் அதற்கு உடன்படவில்லை. இதனால் இருநாடுகளுக்கு இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சவார்த்தையிலும் முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெளியேறும் நிறுவனங்கள்
இதற்கிடையே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வெளிநாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துகளும் முடக்கப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க ரஷ்யாவில் உள்ள மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய நிறுவனங்கள்
இந்நிலையில் தான் ரஷ்யாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் இடங்களை இந்தியா நிரப்ப வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய நிறுவனங்கள் காலி செய்கின்றன. இதை இந்திய நிறுவனங்கள் நிரப்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்திய மருந்து நிறுவனங்களை ரஷ்யாவில் துவங்கலாம். ஏனென்றால் உலகில் ஜெனரிக் மருந்துகள் தயாரிப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் ரஷ்ய மார்க்கெட்டை ஈடுசெய்யும்' என்றார்.

அமெரிக்கா எதிர்ப்பு
தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு, தள்ளுபடி விலையில் அதனை ரஷ்யா வழங்குவதாக கூறுகிறது. இதற்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செயலாளர் ஜென்பிசகி கூறுகையில், ‛‛இந்தியாவின் அனைத்து தலைவர்களுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் அது உக்ரைன் மீதான போருக்கு ஆதரவு அளிப்பதாக பொருள்படும்'' என்றார்.

பொறுத்திருக்க வேண்டும்
மேலும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சனையில் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என கூறி வருகின்றன. அத்துடன் தற்போதைய நிலைப்பாட்டால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் வரலாற்றில் இந்தியா தவறான பக்கத்தில் இடம்பெறும் என அமெரிக்கா கூறியது. இதனால் இந்தியா மீது ஒரு அழுத்தம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருந்து உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ரஷ்ய மார்க்கெட்டை கைப்பற்றுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications