கோவில் பணத்தில் சொகுசு வாழ்க்கை... அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் பக்தர்களின் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் மோசடி செய்த இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்த சாமியார், வங்கி மற்றும் வரி மோசடி உட்பட பல்வேறு நிதி மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் அண்ணாமலை வயது 49. சுவாமி ஸ்ரீ செல்வம் சித்தர் என்றும் அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர், கோவிலுக்கு கடவுளை தரிசிக்கவும், பூஜை தொடர்பாகவும் வரும் பக்தர்களின் கடவுள் நம்பிக்கையை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடி
நெருக்கமான பக்தர்கள், தேவையான பணத்தை வழங்க தங்களது கிரெடிட் கார்ட்டு நம்பரையும் கொடுத்து உள்ளனர். கோவிலுக்கு செலவு செய்வதாக பக்தர்களிடம் பொய் சொன்ன அண்ணாமலை அதனை பலமுறை உபயோகித்து உள்ளார். இதனால், பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டும்போது சந்தேகமடைந்தனர். அப்போது, கிரெடிட் கார்டு செலவு குறித்து அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாமியார் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சொகுசு கார்கள்
கோவில் மூலமாகவும், கிரெடிட் கார்ட்டு மூலமாகவும் கிடைத்த பணம் அனைத்தையும் அண்ணாமலை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்திக் கொண்டு ஆடம்பரமான வீடுகள், நிலங்கள் மற்றும் பல சொகுசு கார்களை வாங்கிக் குவித்துள்ளார்.
27 ஆண்டுகள் சிறை
இந்த சாமியார் இந்தியாவில் உள்ள வங்கியிலும் இந்தப் பணத்தை சேமித்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி மற்றும் வரி மோசடி தொடர்பான இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி, சாமியார் அண்ணாமலையை குற்றவாளி என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications