பட்டாயாவில் உல்லாசமாக இருந்துவிட்டு காசு தர மறுத்த இந்தியர்! செருப்பால் தாக்கிய திருநங்கைகள்!
டெல்லி: தாய்லாந்தின் பட்டாயா நகரில் திருநங்கை ஒருவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவரிடம் பேசிய தொகையை திருப்பிக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை நட்ட நடு ரோட்டில் வைத்து இந்திய சுற்றுலாப் பயணியை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறது. அங்கு இரவு நேரத்தில் நிறைய பேர் நின்றிருப்பார்கள். அவ்வழியாக செல்வோரை தொல்லை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் அங்கிருந்த திருநங்கையுடன் உல்லாசமாக இருக்க இவ்வளவு என ரேட் பேசிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் பேசிய படி காசு கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் அந்த திருநங்கை, இந்தியருடன் சண்டையிட்டுள்ளார். மேலும் துணைக்கு வந்த மேலும் இரு திருநங்கைகளும், பேசியபடி காசை கொடுக்குமாறு அந்த இந்தியரை மிரட்டியுள்ளனர். ஆனால் அவரோ அந்த இடத்தை விட்டு காரில் ஏறி தப்பிக்க முயற்சித்தார். அப்போது சுதாரித்த அந்த 3 திருநங்கைகளும் இந்தியரை செருப்பால் அடித்து கடுமையாக தாக்கினர்.
இச்சம்பவம் கடந்த டிசம்பர் 27 அன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. வாக்கிங் ஸ்ட்ரீட் கடற்கரை நுழைவாயில் அருகே காயமடைந்த ஒரு இந்திய சுற்றுலாப் பயணி குறித்து சவாங் போரிபூன் அறக்கட்டளை மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்டவர் 52 வயதான இந்தியரான ராஜ் ஜசுஜா என்பதை உறுதி செய்தனர். அவருக்கு முகம் மற்றும் தலைப்பகுதியின் பின்புறத்தில் காயங்கள் இருந்தன. முதலுதவிக்குப் பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
19 வயதான போங்போல் பூஞ்சித் என்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ராஜ் வாக்கிங் ஸ்ட்ரீட் நுழைவாயில் அருகே ஒரு திருநங்கை பாலியல் தொழிலாளியுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறினார். இந்த சண்டை பின்னர் தீவிரமடைந்து, இருவரும் ஒருவரையொருவர் துரத்தி தாக்கிக் கொண்டனர்.
அந்த திருநங்கை தனது நண்பர்கள் பலரை அழைக்க, அவர்கள் குழுவாகச் சேர்ந்து இந்திய சுற்றுலாப் பயணியைத் தாக்கினர். சுற்றுலாப் பயணி அந்த திருநங்கையுடன் உல்லாசமாக இருந்து அவருக்கு பேசியபடி முழுத் தொகையையும் செலுத்தாததே இந்த தகராறுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ராஜ் இந்த சம்பவம் குறித்து இதுவரை பொதுவெளியில் எதுவும் பேசவில்லை.
ராஜ் முழுமையாக குணமடைந்த பின்னர் அவரிடம் புகார் கேட்க போவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பட்டாயாவில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் அண்மைய மாதங்களில் பலமுறை பதிவாகியுள்ளன. செப்டம்பரில், ஒரு இந்தியர் திருநங்கையை அனுமதியின்றி தொட்ட தகராறில் தாக்கப்பட்டார்.
இதேபோல், அக்டோபரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பணம் தகராறில் மூன்று தாய்லாந்து திருநங்கைகள் இரு இந்தியர்களை ஒரு ஹோட்டலில் தாக்கி, 69 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் தப்பினர். தாய்லாந்து போலீசார் இந்த சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications