அமெரிக்கா வேண்டாம்.. இந்தியர்கள் "இந்த" ஐரோப்பிய நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவது ரொம்பவே ஈஸி!
மாட்ரிட்: இந்தியர்கள் பலருக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுவோருக்கு இந்த ஐரோப்பிய நாடு ஓர் அற்புதமான வாய்ப்பைத் தருகிறது. இந்த நாட்டிற்கு நீங்கள் செல்வதும் ஈஸி, நிரந்தரக் குடியுரிமை பெறுவதும் ஈஸி. மேலும், இந்த ஒரு நாட்டில் உங்களுக்கு நிரந்தரக் குடியுரிமை இருந்தாலே மற்ற 26 ஐரோப்பிய நாடுகளுக்கு உங்களால் செல்ல முடியும். இத்தனை சலுகைகளை அள்ளி தரும் அந்த நாடு குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் இந்த நாடுகளுக்குச் செல்வதே மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படியிருக்கும் சூழலில் இந்தியர்கள் பலரும் விரும்பும் ஐரோப்பிய வாழ்க்கையை இந்த நாடு வழங்குகிறது.

ஸ்பெயின் பிஆர்
வேறு எதுவும் இல்லை.. ஸ்பெயின் தான் அந்த நாடு. சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட ஸ்பெயினில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் ஈஸியாகவே பிஆர் எனப்படும் நிரந்தரக் குடியுரிமையைப் பெறலாம். அப்படிப் பெற்றுவிட்டால் 26 செங்கன் நாடுகள் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமல் சென்று வரலாம். இப்படி ஸ்பெயினின் நிரந்தரக் குடியுரிமை பெறுவதில் நமக்கு பல நன்மைகள் உள்ளன. ஒரு முறை நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்டாலே எந்தவிதத் தடையும் இல்லாமல் ஸ்பெயினில் வாழவும், வேலை செய்யவும் முடியும்.
நிரந்தரக் குடியுரிமை பெறும் வழிகள்
நிரந்தரமாக ஸ்பெயினில் வசிக்க விரும்பும் இந்தியர்கள் செல்லுபடியாகும் நீண்ட கால விசாவில் ஸ்பெயினுக்கு வர வேண்டும். அதற்கும் கூட ஸ்பெயின் நமக்கு பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிறது.
- வேலை விசா: ஸ்பெயினில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் வல்லுநர்கள் இந்த விசாவை பெறலாம்.
- மாணவர் விசா: ஸ்பெயினில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
- Non-Lucrative விசா: ஓய்வு பெற்றவர்கள் அல்லது வேலை இல்லாமலேயே வாழப் போதுமான செல்வம் உள்ளவர்கள் இதைப் பெறலாம்.
- முதலீட்டு விசா (கோல்டன் விசா): ஸ்பெயினில் முதலீடு செய்யும் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த விசாவில் அங்கு செல்லலாம்.
இந்த விசாவில் ஸ்பெயினுக்கு சென்று, தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அங்கு வசிக்க வேண்டும். அப்படி வசித்தாலே போதும் நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
- 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஸ்பெயினில் தொடர்ச்சியாக வசித்துள்ளதை நிரூபிக்க வேண்டும்.
- நிரந்தரக் குடியுரிமை கோருவோர் மீது எந்தவொரு போலீஸ் நடவடிக்கை அல்லது நிதி முறைகேடு புகார்கள் இருக்கக்கூடாது.
- போதுமான வருமானம் மற்றும் உரிய மருத்துவக் காப்பீடு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
- வாடகை ஒப்பந்தங்கள், மின்சார பில் அல்லது இதர பில்களை துணை ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இத்தோடு ஏன் நிரந்தரக் குடியுரிமை தேவை என்பதை விளக்கி, ஸ்பானிஷ் மொழியில் உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஸ்பெயினில் இருக்கும் குடியேற்ற அலுவலகம் (Oficina de Extranjería) அல்லது உள்ளூர் காவல் நிலையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
- இதற்கு விண்ணப்பக் கட்டணம் €21.87 (சுமார் ₹2,265) செலுத்த வேண்டும்.
ஏன் முக்கியம்
இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும், அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை பிராசஸ் செய்வார்கள். விண்ணப்பத்தை பிராசஸ் செய்யும் காலமும் கூட மற்ற நாடுகளை விடக் குறைவுதான். ஒருமுறை நீங்கள் இந்த பிஆர் கார்ட்டை பெற்றுவிட்டால் ஸ்பெயினில் காலவரையின்றி வாழவும், வேலை செய்யவும் முடியும். எனவே, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்தியாவில் அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? நாட்டின் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க











Click it and Unblock the Notifications