பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்.. இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர் பயங்கரவாதி ‘கடத்தல்’!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தியாவின் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2008-ம் ஆண்டு இந்தியாவின் மும்பை மீது பாகிஸ்தனைல் இருந்து ஊடுருவிய அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களில் 175 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் பதுங்கியபடி இந்தியாவில் நாசகார சதித் திட்டங்களை நிறைவேற்றிய ஹபீஸ் சயீத் மகன், கமாலுதீன் சயீத் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கமாலுதீன் சயீத் உடல்தான் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஒருவரும் பாகிஸ்தான் மண்ணிலேயே போட்டுத் தள்ளப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்திய எதிர்ப்பு பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அண்மையில் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கொலையாளிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. தாரீக் ஜமீல் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியா, இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கியவர். இந்த தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான க்வாஜா ஷாகித் என்ற ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம், ஐஎஸ்ஐ அமைப்பினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலின் தளபதியாக மூளையாக செயல்பட்டதும் இந்த ஷாகித் அலியாஸ் மியாதான். பாகிஸ்தான் அரசும் இத்தகைய மர்ம படுகொலைகள், கடத்தல்களுக்கு யாரையும் குற்றம் சுமத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications