பறந்து கொண்டிருந்த விமானம்.. சக பயணி மீது தெறித்த "திரவம்.." பக்கத்து சீட்டு பயணியின் உவ்வே செயல்!
பாலி: இந்தோனேசியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென எழுந்து சக பயணிகள் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, பாகிஸ்தானில் ஓடும் விமானத்தில் ஒரு பயணி திடீரென அவசரகால கதவை திறக்க முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை விமான ஊழியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியதால், அந்த விமானமும் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது. இதுபோல அண்மையில் விமானப் பயணி ஒருவர் செய்த செயல், அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஏறியதில் இருந்தே சேட்டை..
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கடந்த 2-ம் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் நியூசிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஹுக்ஸ் (40) என்ற நபரும் பயணித்துக் கொண்டிருந்தார். விமானத்தில் ஏறியது முதலாகவே சக பயணிகளிடம் தேவையில்லாமல் பேசுவது; அவர்கள் மீது தண்ணீரை தெளிப்பது என அவர் சேட்டை செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், இவரது செயல் மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே, தகராறு ஏற்படும் சூழல் உருவாகியது. விமான ஊழியர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

தலைக்கேறிய மது போதை..
இந்நிலையில், விமானம் சென்று கொண்டிருந்த போது இரவு நேரத்தில் அங்கு வந்து செல்லும் பணிப்பெண்களிடம் மதுபானங்களை வாங்கி அருந்திக் கொண்டே இருந்தார் ஜேம்ஸ் ஹுக்ஸ். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவருக்கு போதை தலைக்கேறியது. அதே சமயத்தில், சிறுநீரும் அவசரமாக வந்துள்ளது. ஆனால் அவரால் கழிப்பறைக்கு நடந்து செல்வது என்பது முடியாத காரியம்.

பீய்ச்சியடிக்கப்பட்ட சிறுநீர்.. அலறிய பயணிகள்
இதனால் இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில், நைஸாக எழுந்து விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து சிறுநீர் கழிக்க தொடங்கினார். ஆனால் போதை அதிகமாக இருந்ததால் நிதானம் இல்லாமல் மனிதர் அலைபாய்ந்ததால் அங்கிருந்த சில பயணிகளின் முகம் முதல் கால் வரை அவரது சிறுநீர் பீய்ச்சி அடித்தது. முகத்தில் ஏதோ தண்ணீர் படுகிறதே என திடுக்கிட்டு எழுந்த பயணிகள், ஒருவர் தங்கள் மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அலறத் தொடங்கினர்.

தண்டனை..
இந்த சத்தத்தை கேட்ட விமான ஊழியர்கள் அங்கு வந்து ஜேம்ஸை தனியாக அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் பிரிஸ்பேன் நகர் வந்ததும், அவரை அங்கிருந்த காவல்துறையினரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஓராண்டு நன்னடத்தை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications