இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானத்தின் பெரிய உடற்பகுதி மீட்பு
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் உடற்பகுதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது.

கடலில் இருந்து 103 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி உள்ளிட்ட சில பாகங்கள் கிடைத்தன. இந்நிலையில் உடல்களை தேடும் பணி மட்டும் தொடர்கிறது. ஆனால் விமான பாகங்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது என்று இந்தோனேசியா அறிவித்தது.
இந்நிலையில் விமானத்தின் உடற்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள பாகங்களிலேயே இது தான் பெரிய பாகம் ஆகும். அந்த பாகம் கப்பல் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவியதும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications