இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. புகை மண்டலமான கிராமங்கள்.. 13 பேர் பலி, பலர் படுகாயம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமெரு எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் அதிக எரிமலைகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும். இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் நேற்றைய தினம் திடீரென எரிமலை ஒன்று வெடித்து சிதறியது.

வெடித்து சிதறிய எரிமலை
இந்தோனேசியா நாட்டின் ஜாவா என்ற தீவில் லுமாஜங் மாவட்டத்தில் அமைந்துள்ளது செமெரு எரிமலை. நேற்றைய தினம் இந்த எரிமலை கடுமையான புகை மூட்டத்துடன் வெடித்தது. செமெரு எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியது. இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி அங்கு வசித்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது 57 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகை மண்டலமாக கிராமம்
செமெரு எரிமலை கடும் சீற்றத்துடன் வெடித்து சிதறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதில் எரிமலையில் இருந்து வரும் கரும்புகையில் இருந்து தப்ப பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். மேலும், இந்த எரிமலை வெடிப்பால் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சில கிராமங்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக எரிமலை சாம்பல் படிந்து இருக்கும் நிலை படங்களும் வெளியாகியுள்ளது.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்
தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்டமை துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் முஹாரி குறிப்பிட்டார். மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் சிக்கியுள்ளதாலும் சாலைகள் மிக மோசமாக தேசமடைந்துள்ளதாலும் ஹெலிகாப்டரை கொண்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் அப்பகுதியில் சூழ்ந்துள்ள அடர்ந்த புகையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

விமான சேவை
இந்த ஏரிமலை சீற்றத்தால் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் விமான சேவைகள் வழக்கமாகவே இயங்குவதாகவும் இந்தோனேசிய வான்வெளியைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிட்டத்தட்ட 130 ஆக்டிவ் எரிமலைகள் உள்ளன. அதில் ஜாவா தீவில் மிகவும் உயரமான இடத்தில் இந்த செமெரு எரிமைலை உள்ளது. முன்னதாக இதே எரிமலை இந்தாண்டு ஜனவரி மாதம் வெடித்தி சிதறியது. நல்வாய்ப்பாக அப்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications