சடலங்களுடன் வாழும் வினோத கிராமம்.. அதுவும் ஆண்டு கணக்கில்.! காரணத்தை கேட்டால் மிரண்டு போவீங்க
ஜகார்த்தா: பொதுவாக ஒருவர் உயிரிழக்கும் போது அவர்களின் உடலைப் புதைக்கவோ அல்லது தகனமோ செய்வார்கள். ஆனால், இங்கு இந்தோனேசியாவில் வாழும் டோராஜன் இன மக்கள் உயிரிழந்தோரின் சடலங்கள் உடனேயே பல மாதக் கணக்கில் அவ்வளவு ஏன் வருடக் கணக்கில் கூட வைத்திருப்பார்களாம். அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பெரும்பாலான நாடுகளில் இறந்தவர்களின் உடல் சில நாட்களில் புதைக்கப்படும். இந்தியா உட்பட சில நாடுகளில் குறிப்பிட்ட பிரிவினரின் உடல்கள் எரியூட்டப்படும்.

டோராஜன் இன மக்கள்
இன்னும் சில மதங்களைப் பின்பற்றுவோரின் உடல்கள் வேறு விதமாகத் தகனம் செய்யப்படும். ஆனால், இந்தோனேசியாவின் டோராஜன் மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல. அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அதாவது உயிரிழந்தோரின் உடலைப் பல வாரங்கள், மாதங்கள் அவ்வளவு ஏன் பல ஆண்டுகள் கூட வீட்டில் அப்படியே வைத்திருக்கிறார்கள். நமது நாட்டில் இப்படி யாராவது செய்தால் அவர்களை போலீசார் கைது செய்துவிடும். ஆனால், இங்குப் பல காலமாக இந்த சடங்கை அவர்கள் பின்பற்றுகிறார்கள். மேலும், இன்னும் உயிருடன் இருப்பதைப் போலவே அவர்களை நடத்துகிறார்கள்.
வீட்டில் ஒருவராகவே கருதுவார்கள்
டோராஜன் இன மக்கள் தங்கள் குடும்பத்தில் யாராவது உயிரிழந்தால்.. அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை விட நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே கருதுவார்கள். உயிரிழந்தோருக்கு வீட்டில் தனியாக ஒரு ரூம், புதிய ஆடைகளைக் கூட தருவார்களாம்.. இது மட்டுமின்றி அவர்களுக்கான ரூமை தொடர்ந்து சுத்தம் செய்தும் வருவார்கள். மேலும், நேரத்திற்கு உணவு, சிகரெட் அவ்வளவு ஏன் கழிப்பறை போன்ற செட்அப் கூட தந்துவிடுவார்களாம். இதே நடைமுறையைத் தான் அவர்கள் மாதக் கணக்கில் பின்பற்றுவார்கள்.
ஏன் இந்த வினோத நடைமுறை என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். குடும்பத்தில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும்போது அந்த துயரத்தை ஈடு செய்ய முடியாது. அப்போது உடனே அவரை புதைத்துவிட்டால் அது பெரும் சோகமாக அமையும். இதன் காரணமாகவே இதுபோல அவரது இழப்பை மனது ஏற்றுக் கொள்ளும் வரை வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். அதன் பிறகே அடக்கம் செய்கிறார்கள்.
12 ஆண்டுகள் சடலத்துடன் வாழ்க்கை
இதுபோலத் தான் மாமக் லிசா என்ற பெண், தனது தந்தையின் உடலை 12 ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்தாராம். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அவரை உடனடியாக புதைத்துவிட்டால்.. அந்த வலியைத் தாங்க முடியாது. இதன் காரணமாகவே இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம்" என்கிறார்.
இப்படிப் பல மாதங்களுக்குப் பிறகு டோராஜன் இன மக்கள் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளை நடத்துவார்கள். ஒருவரது அந்தஸ்தைப் பொறுத்து இந்த இறுதிச் சடங்கு மாறுபடும். அதாவது எப்படி நம்ம ஊரில் ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ.. அதைப் பொறுத்து திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்துவார்கள். அதேபோலத் தான் அங்குப் பணத்தைப் பொறுத்து இறுதிச் சடங்கைப் பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள்.
செல்வாக்கைப் பொறுத்து மாறும்
பணக்காரர்கள் மற்றும் அதிக செல்வாக்கு கொண்ட நபர்கள் விருந்துகளை வைப்பார்கள். இசை, டான்ஸ் எனப் பிரம்மாண்டமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துவார்கள். மேலும், அந்நாட்டுக் கலாச்சாரத்தில் எருமைகள் புனிதமாகக் கருதப்படும். இறந்தவரின் பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில், அந்த எருமைகளைப் பலியிட்டு விருந்து கொடுப்பார்களாம். இதன் காரணமாக இறுதிச் சடங்கை நடத்த போதுமான நிதி சேகரிக்கப்படும் வரை உடலை அங்கு வீட்டிலேயே வைத்திருப்பார்களாம்.. இந்த சடங்குகள் அனைத்தும் முடியும் வரை அவரது ஆன்மா அங்கேயே சுற்றி வரும் என்றே நம்பப்படுகிறது.
உடலைப் புதைத்த பிறகும் கூட டோராஜன்கள் இன மக்கள் மானேனே என்ற சடங்கைத் தொடர்ந்து செய்வார்கள். அதாவது புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து அதைச் சுத்தம் செய்வார்களாம். அப்போது அவர்கள் அவர்களுக்கு புதிய ஆடைகளை உடுத்தி, அழகுபடுத்துகிறார்கள். மேலும், போட்டோக்களை கூட எடுத்துக் கொள்வார்கள்.. இதை முதியவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவே கருதுகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications