பாடம் புகட்டுவார்களாம்.. சிந்து நதி நீர் விவகாரத்தில் அதிகரித்த மோதல்.. பாக்.,பிரதமர் திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛‛பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய ஒரு சொட்டு தண்ணீரை எதிரி (இந்தியா) நிறுத்தினாலும் பாடம் கற்பிக்கப்படும்'' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாய்ச்சவடால் விட்டுள்ளார். சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணை வைத்து அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் வாய்க்கொழுப்பில் பேசிய நிலையில் ஷெபாஸ் ஷெரீப் இப்படி பேசியிருப்பது இருநாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. முன்னதாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

indus-water-treaty-pakistan-will-teach-you-a-lesson-you-will-never-forget-says-pakistan-pm-to-indi

பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக சிந்து நதி தான் இருக்கிறது. நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தான் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை பாகிஸ்தானால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான், இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது அவர் சிந்து நதி நீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

‛‛பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய ஒரு சொட்டு தண்ணீரை கூட எதிரியால் (இந்தியா) பறிக்க முடியாது. எங்களின் தண்ணீரை நிறத்துவதாக நீங்கள் மிரட்டலாம். அதற்கான முயற்சியை மேற்கொண்டால் பாகிஸ்தான் உரிய பதிலடி தரும். பாகிஸ்தான் உங்களுக்கு பாடம் புகட்டும் என்பதை மறக்க வேண்டாம்'' என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவில் புலம்பெயர் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசும்போது, ‛‛சிந்து நதிக்கு குறுக்கே இந்தியா அணை கட்டட்டும். அதற்காக காத்திருக்கிறோம். அப்படி அணை கட்டினால் 10 ஏவுகணைகளை ஏவி அணையை அழிப்போம். சிந்து நதி என்ன இந்தியாவின் சொத்தா?'' என வாய்க்கொழுப்புடன் பேசினார்.

அதேபோல் சிந்து நதி நீர் தொடர்பாக நேற்று முன்தினம் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி மிரட்டல் விடுத்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்தால், அவர் நமது வரலாறு, நமது கலாச்சாரம் மற்றும் நமது நாகரிகத்தைத் தாக்குகிறார் என்று அர்த்தம்.

சிந்து நதிக்கு அச்சுறுத்தல் வரும் போது எல்லாம் சிந்து மக்கள் அதை காக்க முன்வந்து இருக்கிறார்கள். போர் ஏற்பட்டால் மோடியை எதிர்கொள்ளும் வலிமை பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது" இன்னொரு போர் வெடித்தால் பாகிஸ்தான் தனது ஆறு நதிகளையும் மீட்க வேண்டியிருக்கும்'' என்று நம் நாட்டிடம் வாங்கிய அடியை மறந்து பேசினார்.

இப்படி பாகிஸ்தான் தலைவர்கள் ஒருபுறம் வாய்க்கொழுப்புடன் பேசினாலும் நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தியது நிறுத்தியது தான். பயங்கரவாதிகளுக்கான சப்போர்ட்டை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே சிந்து நதி நீர் முறைப்படி கிடைக்கும் என்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் தெளிவாக கூறிவிட்டனர். ஆனாலும் பாகிஸ்தான் தலைவர்கள் இப்படி தொடர்ந்து கதறி கொண்டு இருக்கின்றனர்.

இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது கடந்த 1960ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.

ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. அதாவது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் அதில் உள்ளது போல் பாகிஸ்தானுக்கு நம் நாடு தண்ணீர் என்பது வழங்க வேண்டி இருக்காது. ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+