புது ஜீன்ஸ் கூட வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம்.. உச்சத்தில் பணவீக்கம்.. தத்தளிக்கும் அர்ஜென்டினா
புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் அதிகரித்துள்ளது. புது ஜீன்ஸ் உடைகளை கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்து உள்ளது. இதனால் பழைய துணிகளை வாங்கும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. 140 சதவிகிதம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு திண்டாடி வருகின்றனர். அமெரிக்கா டாலருக்கு நிகரான அர்ஜென்டினாவின் பணமான பெசொ ( peso)வின் மதிப்பு 349.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஜீன்ஸ் உடைகள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் அர்ஜெண்டின மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

கடுமையான விலையேற்றம் காரணமாக பழைய பொருட்கள், ஆடைகள் வாங்கும் சந்தைகளில் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளது. புதிய உடைகள் மற்றும் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு பண மதிப்பு சரிந்து விலையேற்றம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருப்பதால் பழைய உடைகளையே வாங்கி வருகின்றன. அர்ஜென்டினா தென் அமெரிக்க பிராந்தியத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கி வந்தது.
தானியங்கள் ஏற்றுமதியில் கோலோச்சி வந்த அர்ஜென்டினா, இந்த அளவுக்கு கடுமையான பொருளாதர நெருக்கடியில் சிக்கியிருப்பது கடந்த சில தசாப்தங்களில் இதுவே முதல் முறையாகும். நாட்டின் 5-ல் இரண்டு பேர் வறுமையில் வாடி வருகின்றனர். பொருளாதார மந்த நிலை அதிகரித்து இருக்கும் இந்த சூழலில் அடுத்த வாரம் அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இதனால் ஆளும் கட்சி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஜேவியர் மிலே தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகியுள்ளார். அர்ஜென்டினாவில் நிலவும் இந்த பண வீக்க அதிகரிப்பு குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "முன்பை போல ஒரு வணிக வளாகத்திற்கு சென்று எதுவும் வாங்க முடியாத நிலைதான் அனைவருக்கும் உள்ளது. தற்போது இருக்கும் விலைவாசி உயர்வு யாரும் நினைத்து கூட பார்க்காதது.
புது ஜீன்ஸ் துணிகளின் விலை கடந்த ஆண்டில் இருந்ததை விட இரு மடங்கு அதிகரித்து உள்ளது" என்றார். இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கும் விலையேற்றம் அர்ஜென்டினாவில் மக்களை தவிப்புக்கு உள்ளாகியுள்ளது. அர்ஜென்டினாவின் பெசோவின் இந்திய ரூபாய் மதிப்பு 0.24 ஆகும். அதாவது அர்ஜெண்டின ஒரு பெசோவின் மதிப்பு இந்திய ரூபாயில், 0.24 மட்டுமே ஆகும்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications