எலி, கரப்பான், எறும்பு... கொடுமையோ கொடுமை.. வெள்ளை மாளிகையை தொல்லை செய்யும் பூச்சிகள்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிக அளவில் பூச்சி தொல்லைகள் இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிக அளவில் பூச்சி தொல்லைகள் இருப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த பூச்சி தொல்லை காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதிக துன்பத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.
தற்போது இந்த புகார் இணையம் முழுக்க வைரல்ஆகி இருக்கிறது. அமெரிக்க அதிபரை இதை வைத்து பலரும் கலாய்த்து வருகின்றனர்.

தொல்லை மாளிகை
அமெரிக்க அதிபர் இருக்கும் இடமான வெள்ளை மாளிகையில் அதிகமாக பூச்சிகள் நடமாடுகிறது. கடைசியாக வந்த புகாரின்படி அங்கு எலி, பூனை, கரைப்பான் பூச்சி, முட்டை பூச்சி, எறும்பு தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. அவைகள் அனைத்தும் அங்கு இருக்கும் அரசு ஊழியர்களை அதிகம் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
|
குப்பை இருக்கு போல
இந்த நிலையில் இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது. அதன்படி இவர் ''அங்கு குப்பை இருக்கும் போல அதனால தான் நிறைய பூச்சிகள் வருது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் மறைமுகமாக அங்கு இருக்கும் அதிகாரிகளையும், அதிபரையும் சாடி பேசியிருக்கிறார்.
|
காரணம் என்ன
அதேபோல் தற்போது இந்த பிரச்சனைக்கு டிரம்ப்பின் குடும்பம் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ''வெள்ளை மாளிகையில் இருக்கும் டிரம்பும் அவரது குடும்பமும்தான் இதற்கு காரணம். அவர்கள் நிறைய துரித உணவுகள் சாப்பிட்டு மாளிகையை குப்பையாக்கி வைத்துள்ளனர்'' என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
|
தயவுசெய்து மன்னிச்சுடுங்க
தற்போது இவர் இதுகுறித்து மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில் ''வெள்ளை மாளிகையில் இருக்கும் எலி, எறும்பு, பூச்சிகள் அனைத்திடமும் எங்கள் நாட்டு மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அதிகம் கஷ்டப்படுவீர்கள்'' என்று டிரம்பை கலாய்த்து கூறியுள்ளார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications