தினமும் ஒரு கார்.. தங்க படகுகள்! உண்மையான ராஜ வாழ்க்கை இதுதான்.. செல்வத்தில் கொழிக்கும் மன்னர்
தாய்லாந்து: உலகிலேயே மிகவும் வசதி படைத்த மன்னராக தாய்லாந்து மன்னர் மஹா வைஜ்ரலாங்கோர்ன் உள்ளார். இவருக்கு இந்திய மதிப்பில் மட்டும் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறதாம். சொந்தமாக 300 ஆடம்பர கார்கள், 30 தனியார் ஜெட்கள், தங்க படகுகள் உள்ளதாம். உலகின் மிகவும் விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் ரத்தினங்களும் இவரிடம் உள்ளன.
உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் சில நாடுகள் மன்னர் குடும்பத்தை அங்கீகாரம் அளித்து கவுரவித்து வருகிறது. சில குறிப்பிட்ட அதிகாரங்களும் அவர்களுக்கென வழங்கப்பட்டு வருகின்றன.

தாய்லாந்து மன்னர் கிங் ராமா
எடுத்துக்காட்டாக பிரிட்டன் அரச குடும்பத்தை சொல்லலாம். அவர்களுக்கென பல்வேறு சலுகைகளும் உயர் பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் மன்னர்களுக்கென பல சலுகைகள் உள்ளன. உலகிலேயே மிகவும் வசதி படைத்த மன்னராக தாய்லாந்து மன்னர் மஹா வைஜ்ரலாங்கோர்ன் அல்லது கிங் ராமா என்று அழைக்கப்படும் இவர்தான் உள்ளார்.
300 கார், 38 தனியார் ஜெட்
இந்திய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும். இந்த சொத்து மதிப்பு அவரது பாரம்பரிய சொத்துக்கள் மற்றும் பிற முதலீடுகளையும் உள்ளடக்கியது ஆகும். பாங்காங்கில் மட்டும் 17 ஆயிரம் சொத்துக்கள் இவருக்கு சொந்தமாக உள்ளதாம். அது மட்டும் இன்றி விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் மட்டும் 300 க்கு மேல் உள்ளது.
இவர் வைத்து இருக்கும் கார் அனைத்துமே உலகின் டாப் பிராண்ட் கார்கள் ஆகும். வெறும் கார்கள் மட்டும் இன்றி 38 தனியார் ஜெட்களையும் சொந்தமாக வைத்து இருக்கிறார். இவ்வளவுதான் என நினைத்து விடாதீர்கள். தரையிலும் வானிலும் பறக்கும் வாகனங்கள் மட்டுமில்லை. சொந்தமாக படகுகளும் வைத்து இருக்கிறார். இந்த படகுகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டவையாம்.
விலை உயர்ந்த வைரங்கள், ரத்தினங்கள்
உலக அளவில் அரச குடும்பத்தின் பணக்கார மன்னர்களில் ஒருவராக தாய்லாந்து மன்னர் மஹா வைஜ்ரலாங்கோர்ன் விளங்குகிறார். இவர் தாய்லாந்தில் 10ஆவது கிங் ராமா என்றும் அழைக்கப்படுகிறார். 2016 ஆம் ஆண்டு இவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். உலகின் மிகவும் விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் ரத்தினங்களும் இவரிடம் உள்ளன.
தனது இளம் வயதில் பல்வேறு நாடுகளில் கல்வியை முடித்து இருக்கிறார். தாய்லாந்தில் பள்ளிப்படிப்பை முடித்த வஜிரலோங்கோர்ன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தனது பள்ளி படிப்பை முடித்தார். ராயல் மிலிட்டரி கல்லூரியில் இவர் மேற்படிப்பை படித்துள்ளார். விமானி பயிற்சியையும் இவர் முடித்துள்ளார். 1970 ஆம் ஆண்டு தய்லாந்தில் கம்யூனிச புரட்சி ஏற்பட்டது.
4 திருமணம் செய்துள்ளார்
இதற்கு எதிராக நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது மன்னர் வஜிரலோங்கோர்ன் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்க கற்றுள்ளாராம். நான்கு திருமணங்கள் செய்துள்ள வஜிரலோங்கோர்ன், ஒவ்வொரு திருமணத்தையும் ஊடக வெளிச்சம் படும்படி பிரமாண்டமாக நடைபெற்றது.
அவரது ஆடம்பர வாழ்க்கை முறையும் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை வாய்பிளக்க வைக்கும். இவர் மீதான விமர்சனங்களுக்கும் இது வழிவகுத்துள்ளது. பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் உலக அளவில் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க மன்னர்களில் ஒருவராக இவர் தொடர்ந்து நீடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications