கட்டுக்கட்டாக பணம், குளியலறை.. பதுங்கு குழியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சின்வார்! இஸ்ரேல் பகீர்
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான் யூனிஸ் என்ற பகுதியில் சின்வார் ஒளிந்து இருந்த பதுங்கு குழியின் வீடியோவை இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் குளியலறை, பணம் எனச் சொகுசு வசதிகளுடன் அவர் வாழ்ந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. போரின் முக்கிய திருப்பமாக ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

டிஎன்ஏ சோதனையில் சின்வார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சின்வார் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோவையும் கூட இஸ்ரேல் வெளியிட்டு இருந்தது. இஸ்ரேல் இதை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், மேற்குலக நாட்டுத் தலைவர்கள் போர் விரைவில் முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
பதுங்கு குழி: இந்தச் சூழலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த பங்கர் எனப்படும் பதுங்கு குழியின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பரவி வருகிறது. இந்த பதுங்கு குழி காசாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கான் யூனிஸில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு உள்ள இந்த பதுங்கு குழியில் சகல வசதிகளுடன் சின்வார் இருந்ததாக இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?
இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் பதுங்கு குழியில் ஐநா அனுப்பிய உணவுப் பொருட்கள் தேவையான அளவு இருப்பது தெரிகிறது. மேலும், அதிக அளவு பணம், வாசனைத் திரவியங்கள், ஷவர் உடன் கூடிய தனிப்பட்ட குளியலறை உள்ளிட்ட வசதிகள் அந்த பதுங்கு குழியில் இருப்பதாக அந்த இஸ்ரேல் அதிகாரி குறிப்பிடுகிறார்.
வசதிகள்: இந்த வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவில் சின்வார் வீட்டில் உள்ள வசதிகளை இஸ்ரேல் வீரர் ஒருவரே விளக்குகிறார். இருப்பினும், சில காரணங்களுக்காக அவரது முகத்தைக் காட்டாமல் இஸ்ரேல் ராணுவம் பிளர் செய்துள்ளது. பார்க்கக் குடியிருப்பு கட்டிடம் அளவுக்கு இருக்கும் அந்த இடத்தில் நடந்து சென்று அவர், அங்குள்ள வசதிகளை விளக்குகிறார்.
கட்டுக்கட்டாக பணம்: அதில் சமையலறைப் பொருட்கள், பாலஸ்தீன அகதிகளுக்கு ஐநா வழங்கிய நிவாரண மற்றும் உதவிப் பொருட்கள் ஆகியவை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.8.4 கோடி) ரொக்கமாக இருப்பதாகவும் அந்த வீரர் கூறுகிறார்.
கொல்லப்பட்ட சின்வார்: ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த சின்வார் தான் கடந்தாண்டு அக். 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு பிறகே இஸ்ரேல் ஹமாஸ் இடையே நேரடியாகப் போர் வெடித்தது. அவர் ரஃபாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன், போரின் ஆரம்ப நாட்கள் இந்த பதுங்கு குழியில் தான் கழித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தை கண்டறிந்து இஸ்ரேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து இருக்கிறது. அந்தத் தகவல் தெரிந்தவுடன் சின்வார் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. அப்போது தான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications