இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?
தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இல்லத்தைக் குறிவைத்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு காரணம் என கூறப்படும் நிலையில், ஈரானுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. கடந்தாண்டு வெடித்த போர் இதுவரை முழுமையாக ஓயவில்லை. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடர்ந்தே வருகிறது.

ஹிஸ்புல்லா எச்சரிக்கை: அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் திருப்பமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். இது போரின் மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது. இதை மேற்குலக நாடுகள் வரவேற்றாலும் கூட, ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் மிகக் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம் என்று கூட ஹிஸ்புல்லா எச்சரித்தது.
கொலை முயற்சி: இந்த எச்சரிக்கை வந்து சில நாட்களில் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.. மொத்தம் 3 டிரோன்கள் நெதன்யாகு வீட்டை நோக்கி வந்துள்ளது. அதில் 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருப்பினும், ஒரு டிரோன் நெதன்யாகு இல்லத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியிருக்கிறது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து கொந்தளித்த நெதன்யாகு, "என் மீதும், எனது மனைவி மீது நடந்த இந்த கொலை முயற்சி மிகப் பெரிய தவறு.. இதனால் இஸ்ரேல் தனது சண்டையை நிறுத்தும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம். இஸ்ரேல் மக்களைத் துன்புறுத்தினால், அது யாராக இருந்தாலும் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். காசாவில் உள்ள பணைய கைதிகளை முழுமையாக மீட்கும் வரை எங்கள் போர் தொடரும்" என்று கூறியிருந்தார்.
ஈரான் விளக்கம்: இந்தத் தாக்குதலுக்கு லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா காரணம் என்று சொல்லப்பட்டது. அதேநேரம் ஹிஸ்புல்லா என்பது முழுக்க முழுக்க ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பு என்பதால் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதேநேரம் இந்தத் தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இருக்கிறதா அல்லது ஹிஸ்புல்லா அமைப்பினர் தன்னிச்சையாக இந்தத் தாக்குதலை நடத்தியதா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரான் இப்போது விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் நாட்டின் ஐநா தூதர் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான தாக்குதலை நடத்தியது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு. இதற்கும் எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஏற்க மறுப்பு: இருப்பினும், இந்த விளக்கத்தை இஸ்ரேல் ஏற்கவில்லை.. ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இது தொடர்பாகக் கூறுகையில், "ஹிஸ்புல்லா அமைப்புக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளிப்பது ஈரான் தான். ஹிஸ்புல்லா அமைப்பை உருவாக்கியது, நிதியுதவி, ஆயுதம், பயிற்சி அளிப்பது என எல்லாவற்றையும் செய்வது ஈரான் தான். அப்படி இருக்கும் போது திடீரென ஹிஸ்புல்லாவை சுதந்திர அமைப்பு போலக் காட்ட முயல்கிறார்கள். உங்கள் பொய்களை வைத்து உலகை ஏமாற்ற முடியாது" என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இஸ்ரேல் ஈரான் பதற்றம் அதிகரித்தே உள்ளது.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல நீ.. சைலண்டாக வேலை பார்த்த ஈரான்.. கள்ள மெளனம் காக்கும் சீனா! -
அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்? -
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்! -
தாண்டவமாடும் ஈரான்.. அமெரிக்காவின் எண்ணெய் கப்பல் மீது கொடூர தாக்குதல்.. கலக்கத்தில் உலக நாடுகள் -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
அண்ணே டேங்க ஃபுல் பண்ணுங்க..நாளைக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? சென்னை பெட்ரோல் பங்குகளில் செம கூட்டம்!












Click it and Unblock the Notifications