இந்தியாவிற்கு சிக்கல்.. கவனமாக இருங்க! ஹசீனா டெல்லியில் உள்ள நேரத்தில்.. வங்கதேச யூனுஸ் எச்சரிக்கை
டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்று உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவி ஏற்று உள்ளார். இவர் பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இவருக்கு இருக்குமா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் இவர் பதவி ஏற்றுள்ளார்.

யூனுஸ் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று ராணுவத் தளபதி கூறி உள்ளார். இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர் இவர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியாவிற்கு நெருக்கம். தற்போது யூனுஸ் உள்ளே வந்திருப்பது இந்தியாவிற்கு ஒரு வகையில் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இவர் இந்தியாவை விட பாகிஸ்தான், அமெரிக்காவுடன்தான் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
இவர் அமெரிக்காவின் சிஐஏவிற்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுவதால்.. இவரை தேர்வு செய்ததற்கு பின் வேறு சில அரசியல் அழுத்தங்கள், சர்வதேச திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் தற்போதைய பிரச்சனைகளை சமாளிக்க உதவுவதற்கு தயாராக இருப்பதாக கூறி உள்ளார். என் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும், நாம் சிக்கலில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்ற திட்டத்துடனும் இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
எச்சரிக்கை: இந்த நிலையில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார். வங்கதேச மக்கள் இப்போது ஹசீனா வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கொண்டாட்டமே இங்கே கலவரத்திற்கு, மோதலுக்கு கூட வழிவகுத்து விடுகிறது. நாட்டில் விரைவில் ஸ்திரத்தன்மை திரும்பும். இப்போது நடைபெறுவது ஹசீனாவின் ஆட்சியின் தொடர்ச்சி. கொண்டாட்டத்திற்குப் பிறகு மக்கள் வீடு திரும்புவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் வேலையில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் சுதந்திரமாக வேலை செய்வார்கள். வங்கதேசம் 170 மில்லியன் மக்கள் வாழும் நாடு. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். முறையாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகம்தான் ஸ்திரமின்மைக்கு மருந்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வங்கதேசம் ஸ்திரமற்றதாக மாறினால், இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலம், மியான்மருடன் சேர்ந்து பாதிக்கப்படும். வங்கதேசம் பாதித்தால் எல்லையில் உள்ள இந்தியாவின் மாநிலங்களும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம், என்று கூறியுள்ளார்.
பதவி என்ன?: வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு சட்டம்தான் அங்கே இந்த போராட்டம் நடக்க முக்கிய காரணம் ஆகும்.
வங்கதேசத்தில் நடக்கும் போராட்டம் மற்றும் கலவரத்தில் குறைந்தது 498 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அங்கே ஒரு வாரத்திற்கும் மேலாக போராடினர். கடந்த ஜூலை 19 கொண்டு வரப்பட்ட அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
போராட்டம்: கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய போராட்டமாக மாறி உள்ளது. டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்வலர்கள், பொதுமக்கள் vs காவல்துறை, ஆளும்கட்சி ஆதரவாளர்கள் இடையிலான கலவரமாக இந்த போராட்டம் மாறி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 1971ல் நடத்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது போரில் கலந்து கொண்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்தே அங்கே போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் முதலில் போராட்டத்தில் குதித்தனர். .
இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.. அதற்கு பதிலாக சாதாரண மெரிட் சிஸ்டம் வேண்டும் என்றும் அறிவித்து இவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இடஒதுக்கீடு மட்டுமின்றி 15 வருடங்களாக ஹசீனா ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த மக்கள் விலைவாசி தொடங்கி பாதுகாப்பு வரை பல விஷயங்களை குறிப்பிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் போராட்டம் தற்போது அங்கே அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications