இஸ்ரேல் தாக்குலில் 2 பேர் பலி.. ஈரான் ராணுவம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை ஈரானின் ராணுவ நிலைவகள் மீது, இஸ்ரேல் சரமாரியாக குண்டு மழை பொழிந்தது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அறிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு முக்கிய காரணம் இஸ்ரேல்தான். பாலஸ்தீனத்தை பிரித்து எப்போது இஸ்ரேல் உருவாக்கப்பட்டதோ, அப்போது முதல் ஒரே பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவுடன் தொடர்ந்து தனது நிலப்பரப்பை விரிவாக்கம் செய்து வந்திருக்கிறது. இதற்கு எதிராக உருவான பாலஸ்தீன விடுதலை அமைப்புகள், இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்க, பதிலுக்கு இஸ்ரேலும் போரை நடந்த.. இப்போது மத்திய கிழக்கு ரத்தக்களறியாக மாறியிருக்கிறது.

israel iran

சில நாட்களுக்கு முன்னர், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டனர். என்னதான் போராக இருந்தாலும், அது இரண்டு நாடுகளுக்கு இடையேதான் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஈரானை போருக்குள் இழுக்கும் விதமாக இஸ்ரேல் திட்டமிட்டே பெய்ரூட் தாக்குதலை நடத்தியதாக பேசப்பட்டு வருகிறது. இப்படியாகத்தான் ஈரான் இந்த போருக்குள் நுழைந்தது.

பெய்ரூட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 200 ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது வீசியது. இதில் பெரும்பாலனவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பெய்ரூட் தாக்குதலுக்கும், இந்த தாக்குதலுக்கும் சரியா போச்சு.. இனி எங்க மேல கைய வச்சா, கை இருக்காது என ஈரான் அப்போதே எச்சரித்து. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத இஸ்ரேல்.. இன்று பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.

இன்று காலை ஈரானின் ஏவுகணை உற்பத்தி செய்யும் இடம், அதை பாதுகாக்கும் இடம், அது நிலை நிறுத்தப்படும் இடம் என அனைத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஈரான் தற்போது தெரிவித்திருக்கிறது. உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், ஈரான் இந்த தாக்குதலை சகித்துக்கொண்டு சும்மா இருக்காது. எனவே, புதிய தாக்குதலுக்கு திட்டமிடும். அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க தொடங்கியிருக்கும்.

ஆக எதிர் வரும் நாட்களில் மத்திய கிழக்கு மேலும் பதற்றமடையும் சூழல் உருவாகியிருக்கிறது. போரை தொடங்கி வைத்தது அமெரிக்காதான். இப்போது இருக்கும் இஸ்ரேலை உருவாக்க பாலஸ்தீனத்தை உடைத்ததும் அமெரிக்காதான். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதும் அமெரிக்காதான். எனவே, இப்பிரச்னைக்கு ஐநாவால் மட்டுமே தீர்வு காண முடியும்.

ஐநா கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் போட்டு அது நிறைவேற்றப்பட்டாலும் கூட, இஸ்ரேல் இதற்கு கட்டுப்படாது. எனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி உடனடியாக போர் நிறுத்த தீர்மானம் போடப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறத்த தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+