"மார்பகம், பெண் உறுப்பு!" போராடும் பெண்களை குறிவைத்து சுட்டு தள்ளிய ஈரான் படைகள்! டாக்டர்கள் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை அங்குள்ள பெண்கள் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் போராட்டத்தை ஒடுக்க மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

ஈரான் நாட்டில் கடுமையான ஷரியா சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதிலுள்ள பல்வேறு சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகச் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அங்கு அரசுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே போராட்டம் நடைபெறும் இடங்களில் பெண்களைக் குறிவைத்து மோசமாகத் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் போராட்டம்

ஈரான் போராட்டம்

ஈரான் நாட்டில் பெண்களுக்குக் கடுமையான ஆடை கட்டுப்பாட்டு விதிகள் உள்ளன. அங்கு 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் பெண்கள் அனைவரும் பொதுவெளியில் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்! ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்படும், இதைக் கண்காணிக்கத் தனியாக கலாச்சார காவலர்கள் என்ற ரோந்து படையும் இருந்தது. அப்படித்தான், கடந்த செப். 13ஆம் தேதி அங்குள்ள குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று இந்த கலாசார காவலர்கள் பிடித்துள்ளனர்.

களமிறங்கிய ராணுவம்

களமிறங்கிய ராணுவம்

அந்தப் பெண்ணை கைது செய்து, கலாசார காவலர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் சில நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம், ஈரான் நாடு முழுக்க கொந்தளிக்கச் செய்ததது. அங்குள்ள கடுமையான சட்டங்களை நீக்கக்கோரியும், ஈரான் அரசுக்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த செப். மாதம் தொடங்கி போராட்டம் இப்போதும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், நாடு முழுக்க நடக்கும் இந்தப் போராட்டத்தை ஒடுக்கவே ஈரான் அரசு பார்க்கிறது. சிறப்புப் படையுடன் இணைந்து ராணுவத்தையும் ஈரான் இறக்கியுள்ளது.

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தாலும் கூட அதிகப்படியாகப் பெண்களை இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஈரான் ராணுவம் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை மூர்க்கத்தனமாக ஈரான் பயன்படுத்துகிறது. போராட்டம் நடத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஈரான் அரசு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. துப்பாக்கி குண்டுகளுக்குப் பதிலாக பெல்லெட்ஸ்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளன. இவை துப்பாக்கி குண்டுகளுக்கு இணையாகத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும், இந்த பெல்லெட்ஸ்கள் உடலை ஊடுருவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆண்கள்

ஆண்கள்

துப்பாக்கிச் சூடுகளின் போது கால்களுக்குக் கீழே தான் சுட வேண்டும் என்ற விதியை ஈரான் காற்றில் பறக்க விட்டுவிட்டது. மேலும், அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களில் பெண்களை மட்டுமே தனியாகக் குறிவைத்து அவர்கள் மீது மோசமாகத் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது ஈரான் ராணுவம். துப்பாக்கிச் சூட்டில் ஆண்கள், பெண்கள் என இருவரும் காயமடைந்தாலும் அதில் முக்கிய வேறுபாடு இருப்பதாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான ஆண்களுக்குக் கால்களிலும், பின்பகுதிகளிலும் தான் இந்த பெல்லெட்ஸ்கள் பாய்ந்துள்ளன.

மார்பகம், பெண் உறுப்பு குறி

மார்பகம், பெண் உறுப்பு குறி

அதேநேரம் பெண்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் முகம், மார்பகம், பெண் உறுப்பைப் பகுதிகளில் தான் காயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்களைத் தனியாகக் குறிவைத்து ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "என்னிடம் 20களில் இருக்கும் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அவரது பெண் உறுப்பில் இரண்டு பெல்லெட்ஸ்கள் பாய்ந்து இருந்தன. மேலும், 10 பெல்லெட்ஸ்கள் தொடையில் பாய்ந்து இருந்தன.

தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

தொடையில் பாய்ந்த பெல்லெட்ஸ்களை எளிதாக எடுத்துவிட்டோம். இருப்பினும், பெண் உறுப்பில் பாய்ந்த பெல்லெட்ஸ்களை எடுப்பது கடினமா இருந்தது. ஏனென்றால் அவை ஏனெனில் அவை சிறுநீர்க் குழாய் மற்றும் பிறப்புறுப்புக்கு இடையே பாய்ந்து இருந்தது. இதுபோன்ற நேரங்களில் எளிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள் உள்ளன. அந்தப் பெண்ணிடம் நான் கேட்ட போது, 10 பேர் சூழ்ந்து கொண்டு தொடையில் குறிவைத்துச் சுட்டதாகத் தெரிவித்தார். பெண்கள் பலருக்கும் இதுபோன்ற காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்போது நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டங்கள் தொடரும் நிலையில், ஈரான் அரசு ஏற்கனவே பெண் உயிரிழப்பிற்குக் காரணமான காலச்சார காவலர்கள் பிரிவைக் கலைப்பதாகச் செய்வதாக அறிவித்துவிட்டது. இருப்பினும், போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சியாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. இருப்பினும், இதைக் கண்டு கொள்ளாத ஈரான் அரசு, சில வெளிநாட்டுச் சக்திகள் தங்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகச் சாடியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+