தொடங்கும் போர்.. அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்.. பாக்தாத்தில் பரபரப்பு!
அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
Recommended Video
பாக்தாத்: அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பதற்றம் எப்போது வேண்டுமானாலும் மூன்றாவது உலகப்போரில் முடியும் என்றும் கூறுகிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழி திட்டம்
இந்த தாக்குதலுக்கு பழி வாங்க வேண்டும் என்று ஈரான் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. விரைவில் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் கொலை செய்யப்பட சுலைமானியின் இறுதிச்சடங்கு நேற்று முதல் நாள் நடந்தது. இதில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்.

தாக்கியது
இந்த நிலையில்தான் ஈரான் அமெரிக்க இடையே சண்டை தொடங்கியது.பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் நிலை
இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அல் அசாத் விமான தளம் பகுதியில் அமெரிக்காவின் இரண்டு விமான தளங்கள் இருக்கிறது. இங்குதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானில் இருக்கும் ஈராக் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.

என்ன பலி
இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு விரைவில் அமெரிக்க படைகள் பதில் தாக்குதல் நடத்த உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications