ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்!
அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீண்ட கால மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வப் போர் நிறுத்தம் (Ceasefire) மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) பகுதியை மீண்டும் திறப்பதற்கான அமைதி ஒப்பந்த்தை நோக்கி இரு நாடுகளும் நெருங்கி வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, ஈரானிடம் அதிகளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை (Enriched Uranium Stockpile) என்ன செய்வது என்ற ஒற்றை விவகாரம் தான் தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த அணுசக்தி விவகாரம் தான் தற்போதைய ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையையும் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகமான சிஎன்என் (CNN) தனது அதிரடி செய்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

440 கிலோ யுரேனியம்
சிஎன்என் அறிக்கையின்படி, வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையேயான தற்போதைய பேச்சுவார்த்தையில் மிகவும் சர்ச்சைக்குரிய புள்ளியாக உருவெடுத்துள்ளது ஈரானின் யுரேனியம் இருப்புதான். குறிப்பாக, ஈரானிடம் தற்போது 60 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட சுமார் 970 பவுண்ட் (கிட்டத்தட்ட 440 கிலோ) எடையுள்ள அதிபயங்கர யுரேனியம் இருப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தன்னிடம் உள்ள இந்த "அணு துகளை" (Nuclear Dust) முழுமையாகச் ஒப்படைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். ஆனால், ஈரான் அதிகாரிகளோ, இந்த யுரேனியத்தை தங்கள் நாட்டு மக்களின் தேவைகளுக்கான பொது அணுசக்தித் திட்டத்தில் (Civilian Nuclear Programme) பயன்படுத்துவதற்கு முழுமையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்று கூறி அமெரிக்காவின் நிபந்தனையை திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்த யுரேனியத்தை வைத்து ஈரான் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை உருவாக்கக்கூடும் என்ற சர்வதேச நாடுகளின் அச்சத்தின் ஆணிவேராக அமைந்துள்ளது.

அணுசக்தி நிபுணர்களின் பகீர் விளக்கம்
ஈரானின் இந்த யுரேனியம் இருப்பு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். பொதுவாக, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்குக் குறைந்தபட்சம் 90 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது.
ஈரானிடம் தற்போதுள்ள 60 சதவீத தூய்மையுள்ள யுரேனியம் என்பது தொழில்நுட்ப ரீதியாக ஆயுதக் தரத்திற்குக் கீழ் மட்டத்தில் இருந்தாலும், ஈரானிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செறிவூட்டும் அணு உலை வசதிகள் (Enrichment Facility) இருப்பதால், ஈரான் அரசு நினைத்தால் போதும் தற்போதைய 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை வெறும் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ 90 சதவீத ஆயுதத் தரத்திற்கு அவர்களால் எளிதாக மாற்ற முடியும் என்று அணுசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
10 அணு ஆயுதங்களை உருவாக்கும் ஆபத்து
சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்களின் முந்தைய கணிப்புகளின்படி, ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அடுத்தகட்டமாகச் சுத்திகரிப்புச் செய்தால், அதனைக் கொண்டு தோராயமாக 10 அணு ஆயுதங்களை (Nuclear Weapons) உருவாக்க முடியும் என கணித்துள்ளனர்.
டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அணு ஆயுதப் பரவல் தடுப்புப் பிரிவைக் கண்காணித்தவரும், பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் ஈரான் உளவுப்பிரிவு முன்னாள் தலைவருமான எரிக் புரூவர் (Eric Brewer) இது குறித்துப் பேசுகையில், இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அகற்றும் நிபந்தனை இடம்பெறாத எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணு உலைச் செயல்பாடுகளைத் தக்க வைத்துக் கொண்டால், 60 சதவீதத்திலிருந்து 90 சதவீத ஆயுதத் தரத்திற்கு மாறுவதற்கு அவர்களுக்கு வெறும் சில நாட்களே போதும் என்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த விஷயத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடு உடன் கையாள வேண்டும் என்று வாஷிங்டன் அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications