ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்.. டிரம்ப் செயலால் கோபம்.. அதிகரிக்கும் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக ஈரான் நேற்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்து இருக்கிறது. மேலும் அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கைகளை கைவிடும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அணு சக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதலை தொடங்கினார். இஸ்ரேல் நாட்டுடன் சேர்ந்து ஈரான் மீது குண்டு மழை பொழியப்பட்டது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

Iran Closes Strait of Hormuz Again Amid Rising Tensions Anger Over Trump s Actions

ஈரான் அமெரிக்கா போர்

இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளையும்ம் எண்ணெய் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹார்முஸ் ஜலசநதியையும் மூடுவதாக அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஒரு மாதமாக போர் நீடித்து வந்த நிலையில், அமெரிக்க்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது.

இதனால் ஈரான் அமெரிக்கா போர் இடையே தற்காலிக நிவாரணம் கிடைத்தது. இதன்படி அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் செய்தன. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் மறுத்தது. எங்கள் முழு நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தான் திறக்க முடியும் என்று கூறியது. அமெரிக்காவும் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் 21 நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியது.

மீண்டும் மூடியது ஈரான்

இதற்கு முதலில் சம்மதம் தராமல் இருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்மதம் தெரிவித்தது அமெரிக்கா. அதாவது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக அறிவித்தது. இதையடுத்து அனைத்து வணிக கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி தெரிவித்து இருந்தார்.

இதனை அமெரிக்க அதிபர் டிரம்பும் வரவேற்று இருந்தார். இந்த நிலையில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடந்து முற்றுகையிட்டு வந்தன. மேலும் ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவு பெறும் வரையில் இது தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதனால் கோபம் அடைந்த ஈரான் ராணுவம், மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+