ஆகாயத்தில் இங்கும் அங்கும் சுற்றி! இஸ்ரேலை குழம்ப வைத்து! தாக்கிய புது ஏவுகணை! ஈரான் மாஸ்டர்ஸ்ட்ரோக்
டெஹ்ரான்: இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களில் அதி-கனரக, நீண்ட தூர செஜில் ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது. இரண்டு நாட்டு போரால் ஏற்பட்டு உள்ள பதட்டமான சூழல்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
செஜில் ஏவுகணை தாக்குதல்
ஈரானிய தூதரகம் மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, போரின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு எதிராக நேற்று ஈரான் 12-வது கட்ட பதிலடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், செஜில் ஏவுகணை விண்ணில் ஏவப்படும்போது இரவில் பிரகாசமான தடத்தை விட்டுச் செல்வது தெளிவாகக் காட்டுகிறது.

இதுகுறித்து IRGC வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தாக்குதலில், அதி-கனரக, நீண்ட தூர, இரண்டு-நிலை செஜில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது. முதல்முறை இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. இது ஆகாயத்தில் இங்கும் அங்கும் சுற்றி..இஸ்ரேலை குழம்ப வைத்து தாக்கும் திறன் கொண்டது. இங்கும் அங்கும் பறக்கும் அதே நேரத்தில்.. பாரம்பரியமாக வெளியிடக்கூடிய நெருப்பு இல்லாமல்.. வித்தியாசமான புகை மற்றும் நெருப்பை வெளியிடும்.
மேலும், திட எரிபொருள் மூலம் இயங்கும் செஜில் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை. ஈரானின் மிகவும் துல்லியமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஒரு டார்கெட்டை 50 மீட்டருக்கும் குறைவான பிழையுடன் தாக்கும் திறன் கொண்டது.
செஜில் ஏவுகணை என்றால் என்ன?
செஜில் என்பது ஈரான் உருவாக்கிய இரண்டு-நிலை, திட எரிபொருள், தரை-தரை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது சுமார் 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் ஆழமான பகுதிகளையும், இஸ்ரேல் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்டது.
முக்கிய விவரக்குறிப்புகள்:
நீளம் 18 மீட்டர் (59 அடி)
விட்டம் 1.25 மீட்டர்
ஏவுகணை எடை 23,600 கிலோ
சுமக்கும் திறன் 700 கிலோ (1,543 பவுண்டுகள்)
இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் ஆரோ பேட்டரிகள் போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Today, the world is witnessing a new and unusual missile in the skies.
— Tehran Updates (@TehranDefence) June 18, 2025
More Surprises to come 🫵 pic.twitter.com/GYHbBsIXYO
இன்னொரு பக்கம் ஈரான் இஸ்ரேலை நோக்கி கோரம்ஷார்-4 என்று பயங்கர ஏவுகணையை ஏவியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு அரிதான நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது ஒரே ஒரு ஏவுகணை மட்டுமே ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை இன்னும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை. இதனால் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவி இதை ஈரான் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது இஸ்ரேலை சோதனை எலி போல ஈரான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வேகமாக சென்று.. அதன்பின் பூமியை நோக்கி வந்து தாக்கும் என்பதால் இதை தடுக்க முடியாது. இதனால் இந்த போர் தீவிரம் அடையும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஈரானின் தொடர் தாக்குதல்களால் இந்த போரில் இஸ்ரேல் பின்தங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications