பாகிஸ்தான் பேசுவார்த்தைக்கு முன்.. இடத்தை காலி பண்ணுங்க.. அமெரிக்காவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட ஈரான்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மீண்டும் சிக்கலிலாகியுள்ளது. ஈரான் துறைமுகத்திற்கு வந்த கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியும், கைப்பற்றியும் உள்ளது. இதற்கு முன்பு ஈரான் பிரனாஸ் கப்பல் மீதும், பிரிட்டன் பைட்டர் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரான் தரப்பு, அமெரிக்கா தனது கடற்படைத் தடையை (naval blockade) முழுமையாக நீக்கினால் மட்டுமே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் ஈரான் அதிபர், ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதியாக உள்ளனர்.

2ஆம் சுற்று பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர், ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசி, அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வலியுறுத்தி வருகின்றனர். ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இது குறித்து ஆலோசனை நடத்தியது.
ஈரான் தரப்பு இந்த பேச்சுவார்த்தை செல்லும் திசை சந்தேகமாக உள்ளது என்றும், முன்பு 2 சுற்று பேச்சுவார்த்தை பிறகு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் தாக்குதல்கள் ஈரான் மீது நடைபெற்றது.
இந்த முறையும் அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு பல வாரங்கள் பேச்சுவார்த்தை நீடித்த பின்னரும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாமலும், முடக்கப்பட்ட சொத்துக்களும் அப்படியே இருக்கிறது. இதனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் என சந்தேகிக்கிறது.
மேலும், 2வது சுற்று பேச்சுவார்த்தை என்பது ஒரு ஏமாற்று வேலை (deception) ஆக இருக்கலாம் என ஈரான் அரசு தரப்பில் சந்தேகிக்கிறது. அல் ஜசீராவுக்கு வெளியிட்டுள்ள தகவல் படி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், அமெரிக்கா தனது கடற்படைத் தடையை நீக்காவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்ற தெளிவான நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
டிரம்ப் பதிவு
ஏப்ரல் 19ஆம் தேதி டிரம்ப் தனது Truth Social தளத்தில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் நாளை மாலை இஸ்லாமாபாத்துக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்கள் என்று பதிவிட்டார். அதே நேரத்தில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதாகக் கூறி வருகிறது, இது விசித்திரமானது ஏனெனில் நாங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ளோம். ஈரான் தன்னறியாமல் நமக்கு உதவுகிறது. ஆனால் இந்த முடக்கத்தால் ஈரான் தான் தினமும் 500 மில்லியன் டாலர் இழப்பை சந்திக்கிறார்கள். அமெரிக்கா எதையும் இழக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா கடற்படை, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. இதேபோல் ஈரான் IRGC படை ஹார்முஸ் வழியாக எந்த கப்பலும் செல்ல முடியாத வகையில் தடையை விதித்துள்ளது. இதனால் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்ந்து பாதிப்பில் உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நம்பியின்மை தொடரும் வரை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் தெளிவாக இல்லை.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications