இந்த ஹீட்டில்.. உடல் ஆரோக்கியத்தோடு வெளியே வந்தாலும்.. சிக்கல்தானாம்.. அந்த அளவிற்கு வெப்பம்.. ஷாக்
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் நேற்று பதிவான வெப்பநிலை அந்நாட்டு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் இந்த நேரம் வெயில் காலம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் வெயில் முடியாமல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட மழை காலத்தில் பெரிய பிரேக் விழுந்து உள்ளது.

கோடைகாலம் முடிந்த பின்பும் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கிறது.
இன்னொரு பக்கம் உலகம் முழுக்க பல நாடுகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸை தாண்டி உள்ளது. உலகம் முழுக்க வெப்ப அலை ஏற்பட்டு இருப்பதாக நாசாவும் விமர்சனம் செய்து உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸை தாண்டி உள்ளது.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. கடுமையான வெப்ப அலை புழுதி காற்று சேர்ந்து வெப்ப காற்று வீசி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத நிலை கூட ஏற்பட்டு உள்ளது.
ஈரான்: இந்த நிலையில்தான் தெற்கு ஈரானில் நேற்று பதிவான வெப்பநிலை உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஈரானில் நேற்று 158 டிகிரி பெரன்ஹீட், அதாவது 70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக இந்த வாரம் புதன் மற்றும் வியாழன் பொது விடுமுறை என்று ஈரான் அறிவித்துள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நல குறைபாடு உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் கடந்த சில நாட்களாக மிக கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெப்பநிலையில் முழு ஆரோக்கியமானவர் வெளியே நின்றால் கூட 6 மணி நேரத்திற்கு மேல் நிற்க முடியாது. அவர்கள் மரணம் அடையும் வாய்ப்பு கூட உள்ளதாக கூறப்படுகிறது.
காலநிலை மாற்றம்: உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications