Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில் அணுசக்தி நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு அதிகரித்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று மாலையில் ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணையை வைத்து இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி மையம் அமைந்து இருக்கும் டிமானோ நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Iranian missile hits near Israel Dimona nuclear

இந்த டிமானோ நகரில் இஸ்ரேலின் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம் உள்ளது. இது தான் இஸ்ரேலின் முக்கியமான அணுஆராய்ச்சி மையமாகும்.

இஸ்ரேல் மீது தாக்குதல்

இந்நிலையில் தான் ஈரானில் இருந்து சீறிப்பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானின் அணுசக்தி மையத்தை சுற்றிய இடங்களில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பழமையான வீடுகள் இடிந்துள்ளது. மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். 12 வயது சிறுவர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். 30 வயது பெண் உள்பட 47 பேர் வரை காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வான் பாதுகாப்பை தாண்டி...

மீட்பு பணிகளை மாகேன் டேவிட் அடோம் மீட்பு பணி துறையும், உள்ளூர் மக்களும் மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடந்த இடத்தில் இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை தடுப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏவுகணைகளை வானிலேய தாக்கி அழிக்க முடியும். ஆனால் அதையும் மீறி ஈரான் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கதிர்வீச்சு கசிவு?

இதனால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைணை இடைமறித்து தாக்க முடியாமல் போனது பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவம் காரணாக அணுசக்தி மையம் சேதமடைந்து கதிர்வீச்சு அதிகரித்துள்ளதா? என்ற அச்சம் ஏற்பட்டது. இதற்கு ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA விளக்கம் அளித்துள்ளது.

கதிர்வீச்சு இல்லை

இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ''இஸ்ரேலின் டிமானோ நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த தாக்குதலால் அங்குள்ள நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்புமில்லை. கதிர்வீச்சு வழக்கம்போல் தான் உள்ளது. வழக்கத்துக்கு மாறான கதிர்வீச்சு வெளியாகவில்லை. அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அணுசக்தி மையங்கள், நிலையங்கள் இருக்கும் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ஒவ்வொருவரும் கட்டுப்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

பதிலுக்கு பதில்

முன்னதாக இஸ்ரேல் சார்பில் ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக தான் ஈரானும் இஸ்ரேலின் முக்கியமான அணுசக்தி மையம் அமைந்துள்ள நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+