"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.." ஈரான் அறிவிப்பு.. ஓவர்நைட்டில் முடிவுக்கு வந்த வளைகுடா போர்
தெஹ்ரான்: வளைகுடாவில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வந்த போர் இப்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 15 நாட்களுக்கு திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வரக் கடந்த சில நாட்களாக டிரம்ப் பிரஷர் போட்டார். ஓவர் நைட்டில் அமெரிக்கா நினைத்தால் ஒட்டுமொத்த ஈரானும் அழியும் எனக் கூட டிரம்ப் கூறினார். டிரம்ப் கொடுத்த காலக்கெடு நெருங்கிய சூழலில், இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

முடிவுக்கு வந்த போர்
இதற்கிடையே திடீர் திருப்பமாக இந்த போர் ஓவர் நைட்டில் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் மீதான தாக்குதல்கள் இரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்படும் என டிரம்ப் அறிவிக்க, ஈரானும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் வளைகுடாவில் மீண்டும் அமைதி திரும்புகிறது.
ஈரான்
அமெரிக்கா சார்பில் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ஈரான் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் வலிமைமிக்க ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்.. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக நன்றி.
பிரதமர் ஷெரீப்பின் ட்வீட்டில் விடுத்த சகோதர கோரிக்கை, அமெரிக்காவின் 15 அம்ச திட்ட அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை, ஈரான் 10 அம்ச திட்டத்தைப் பேச்சுவார்த்தையின் அடிப்படையாக அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளது.. இதனால் ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் வலிமைமிக்க ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்.
ஹார்முஸ்
இந்த இரண்டு வாரப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரான் படைகளுடன் ஒருங்கிணைந்து, தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும்" என்றார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்திருந்தது. இந்தச் சூழலில் தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்த கையோடு ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், எல்பிஜி சப்ளை செயின் பாதிப்பையும் சரி செய்யும்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில் பாகிஸ்தான் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஈரானின் விரிவான 10 அம்ச திட்டத்தின் அடிப்படையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும். இந்தப் பேச்சுவார்த்தைகள் 15 நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பும் ஒப்புக்கொண்டால், நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்த தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்படலாம்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications