ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கர்களுக்கு, ஈரான் சாவு பயத்தை காட்டி உள்ளதாகவும், இதனால் தற்போது மத்திய கிழக்கில் இருந்து கூட்டம் கூட்டமாக அமெரிக்கர்கள் வெளியேறி வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் இருநாடுகள் இடையேயும் அணுஆயுதம் உள்பட பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இதில் அமெரிக்கா - ஈரான் இடையே கருத்து முரண்பாடு உள்ளது.

iran us diplomat

இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழல் உள்ளது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முடித்த பிறகு டொனால்ட் டிரம்ப், ஈரானை தாக்க உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கர்களுக்கு சாவு பயத்தை ஈரான் காட்டி உள்ளது. ஈரானை மீண்டும் அமெரிக்கா தாக்கினால் உடனடியாக வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் கொல்லும் திட்டத்தை ஈரான் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநர் ஜே கிளேட்டன் சார்பில் அமெரிக்க வெளியுறவுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு ஒரு பக்கத்தில் வார்னிங் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ்தில், ''அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்கினால், ஈரான் அமெரிக்க தூதரக அதிகாரிகளை குறிவைத்து கொல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களின் பாதுகாப்புகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகள் பட்டியில் அர்மேனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், சைப்ரஸ், ஜார்ஜியா, ஈராக் இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள தூதர்களை தான் ஈரான் குறி வைக்கலாம் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்னிங்கை அமெரிக்கா சீரியஸாக எடுத்துள்ளது. இதனால் தான் சவுதி அரேபியா நாட்டின் ரியாத்தில் உள்ள தூதரகம், ஜெட்டா மற்றும் தம்மம் நகரில் உள்ள துணை தூதரகங்களில் பணியாற்றும் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா சமீபத்தில் குறைத்ததோடு, பணியில் இல்லாத ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அமெரிக்கதிரும்ப உத்தரவிடப்பட்டது.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், லெபனான், குகத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளதோடு, மற்றவர்கள் உடனடியாக அமெரிக்க திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கர்களுக்கு ஈரான் சாவு பயத்தை காட்டி உள்ளதோடு, அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் மீண்டும் வலுவாகி வருகிறது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+