அமெரிக்காவை நோக்கி திரும்பிய ஏவுகணைகள்.. டிரம்பின் மிரட்டலுக்கு சத்தமின்றி ஈரான் கொடுக்கும் பதிலடி
தெஹ்ரான்: அமெரிக்கா உடனான உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் ஈரான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த போவதாக டிரம்ப் தடாலடியாக அறிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதற்கிடையே டிரம்பின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை ஈரான் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. ஈரான் மீது பல பொருளாதார தடைகளையும் கூட அமரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும், பல விஷயங்களில் இன்னும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பான விவகாரத்தில் இரு தரப்பிற்கும் மோதலே நிலவுகிறது.

அமெரிக்கா- ஈரான்
இப்போது ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அதை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஈரான் அணு குண்டுகளை தயாரித்தால் அது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும். இதனால் ஈரானை ஆணு ஆயுதங்களை தயாரிக்க விடாமல் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட அமெரிக்கா முயன்று வருகிறது.
டிரம்ப் மிரட்டல்
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அதாவது அணு குண்டு விவகாரத்தில் ஈரான் உடன்பாட்டிற்கு வர வேண்டும் என அவர் எச்சரித்திருந்தார். டிரம்ப் எச்சரிக்கை வந்து சில மணி நேரம் கூட ஆகாத நிலையில், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது ஈரான் தனது ஏவுகணைகளை இப்போது தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், இந்த ஏவுகணைகளால் உலகெங்கும் உள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஈரான் பதிலடி
இது தொடர்பாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஈரான் இப்போது தனது ஆயுதங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. நாடு முழுக்க அமைந்துள்ள சீக்ரெட் பங்கர்களில் இந்த ராக்கெட்களை நிலைநிறுத்தியுள்ளோம். வான்வழித் தாக்குதல்களை நடத்த தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த ஏவுகணைகள் உலகெங்கும் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை தாக்கும் திறன் கொண்டவை என்றம் அந்த அமெரிக்க தளங்களை குறிவைக்கும் வகையில் இப்போது ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி
ஈரானிடம் தற்போது அணுகுண்டை தயாரிக்கும் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் கூட அதை நோக்கி அவர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள். ஈரான் அணு குண்டுகளை தயாரிப்பதை தடுக்க ஒபாமா அதிபராக இருந்த போது 2015ல் JCPOA எனப்படும் விரிவான ஒப்பந்தம் ஒன்று அமெரிக்கா ஈரான் இடையே போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் சிவற்றை நீக்கும். ஆனால், அதற்கு பதிலாக ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஆனால், இதற்கு முன்பு (2016-2020) அதிபராக இருந்தபோது அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகே ஈரான் தனது அணு ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் மீண்டும் இப்போது ஒரு புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்துகிறார். ஒப்பந்தம் போடவில்லை என்றால் குண்டுகளை வீசுவோம் என்றும் எச்சரிக்கிறார். இது புவிசார் அரசியல் பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications