ஈரான் அணு ஆயுத சோதனை? அமெரிக்காவை மொத்தமாக கைவிடும் அரபு நாடுகள்.. மத்திய கிழக்கில் புது திருப்பம்
டெஹ்ரான்: ஈரான் நாடு அணு ஆயுத சோதனை நடத்தியதாக கூறப்படும் செய்திகளுக்கு இடையே அரபு நாடுகள் ஈரான் பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுடன் நட்பாக செல்ல அரபு நாடுகள் ஆசைப்படுவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
சன்னி - ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி - ஈரான் கூட இந்த விவகாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிணைய தொடங்கி உள்ளது. நேற்று சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராச்சி ஆகியோர் ரியாத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஈரான் இஸ்ரேல் மோதல் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா சமீபத்தில்தான் அறிவித்தது. சேர முடியாமல் இருந்த இஸ்லாமிய நாடுகளை இஸ்ரேல் சேர்த்து வைக்க தொடங்கி உள்ளது.
அணு ஆயுத சோதனை: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.
ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அங்கே ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். இது அதிகாரபூர்வ விவரம்தான். உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஈரான் அணுவை செறிவூட்டி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் ஈரான் அணு ஆயுதத்தை சோதனை செய்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான் நாடு அணு ஆயுத சோதனை நடத்தியதாக கூறப்படும் செய்திகளுக்கு இடையே அரபு நாடுகள் ஈரான் பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுடன் நட்பாக செல்ல அரபு நாடுகள் ஆசைப்படுவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன் ஒரு கட்டமாக சவுதி அரேபியா - ஈரான் இடையே சந்திப்பு நடந்து உள்ளது.
சவுதி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்து வந்தது. ஆனால் அப்படிப்பட்ட சவுதி ஈரானுடன் நட்பாக செல்ல தொடங்கி உள்ளது. நேற்று சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராச்சி ஆகியோர் ரியாத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது அமெரிக்க தரப்பை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications