Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலுக்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவர் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் அதிகமாக காணப்படவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதாது.

இந்த நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் (Islamic Revolutionary Guard Corps) கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், "குழந்தைகளை கொன்ற இந்த குற்றவாளி உயிருடன் இருந்தால், எங்களது முழு வலிமையையும் பயன்படுத்தி அவரை தேடி சென்று கொல்வோம்" என்று நெதன்யாகுவை குறிவைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Iran Revolutionary Guard Warns Netanyahu

இதற்கிடையில், மார்ச் 13ஆம் தேதி நெதன்யாகு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால் அந்த காட்சியை கவனமாக பார்த்த சில சமூக வலைதள பயனர்கள், அவர் கையை அசைக்கும் ஒரு தருணத்தில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றுகிறது என்று சுட்டிக்காட்டினர். இதனால் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Artificial Intelligence மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இந்த விவகாரம் வேகமாக பரவியதையடுத்து #WhereIsBibi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகத் தொடங்கியது.

'பிபி' என்பது நெதன்யாகுவின் செல்லப்பெயராக பயன்படுத்தப்படும் பெயராகும். இதற்கிடையில், அமெரிக்க அரசியல் விமர்சகர் காண்டேஸ் ஓவேன்ஸ் உள்ளிட்ட சிலர் "பிபி எங்கே?" என்று கேள்வி எழுப்பியதும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிலர் நெதன்யாகு உயிரிழந்துவிட்டார் என்றும், தற்போது வெளியிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த வதந்திகளை நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்துள்ளது. அவர் நலமாக உள்ளார் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக கடுமையான ராணுவ பதற்றம் நிலவி வருகிறது.

வான் தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மிகவும் பதற்றமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள இந்த கடும் எச்சரிக்கை, அந்தப் பகுதியில் நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+