வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காத டிரம்ப்! சுத்துப்போட்ட சீனா+ரஷ்யா! 3ம் உலகப்போரின் தொடக்கமா?
தெஹ்ரான்: சீனாவுக்கு வரி.. ஈரானுக்கு எதிராக கட்டுப்பாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாயை விட்டுள்ள நிலையில், சீனா+ரஷ்யா+ஈரான் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இது 3ம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு கடற்பரை பயிற்சியை மட்டுமே மேற்கொண்டிருக்கின்றன. இதற்கு 'Security Belt 2025' என பெயரிடப்பட்டிருக்கிறது. என்னதான் புதினுடன், டிரம்ப் நெருக்கம் காட்டினாலும்.. இந்த பயிற்சியில் ரஷ்யா பங்கேற்றதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான நாடாக ரஷ்யா இன்னமும் இருக்கிறது என்பதை இது உணர்த்தியுள்ளது.

மூன்று நாடுகளின் கூட்டு பயிற்சி குறித்து ஈரான் செய்தி ஊடகமான தஸ்னிம் (Tasnim) கூறுகையில், "தென் கிழக்கு ஈரானின் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகத்திலிருந்து இந்த பயிற்சி தொடங்குகிறது. மூன்று நாடுகளின் போர்க்கப்பல்கள், கடற்படை விமானங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றன.
ஓமன் வளைகுடாவில் பயிற்சிகள் தொடங்கினாலும் அது வடக்கு இந்திய பெருங்கடல் வரை நீடிக்கும். போர் பயிற்சி மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்பை அதிகரித்தல், மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விஷயங்கள் இந்த பயிற்சியின்போது மேற்கொள்ளப்படும். சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள்தான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் அஜர்பைஜான், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கை ஆகியவை இதில் பார்வையாளராக பங்கேற்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவுக்கு எதிராக 20% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். அதே நேரம் ஈரானுக்கு எதிராக டிரம்ப் கொந்தளித்திருந்தார். இவை இரண்டும் வழக்கத்திற்கு மாறான அதீத தன்மையுடன் இருந்தன. இரு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், இந்த முறை டிரம்ப் கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார் என சர்வசேத அளவில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக சீனா சொன்ன விஷயம் டிரம்புக்கு கௌரவ பிரச்சனையாக இருந்தது.
"எங்களுக்கு எதிரான வர்த்தக போராக இருந்தாலும் சரி.. எந்த மாதிரியான போராக இருந்தாலும் சரி அதை முடிக்கும் வரை தீவிரமாக நாங்கள் எதிர்த்து போராடுவோம்" என்று சீனா 2 நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஈரான், ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி வைத்திருப்பது 3ம் உலகப்போருக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது. இதில் சீனா பக்கம் பெரும்பான்மையான ஆசிய நாடுகள் நிற்கும்.
ஜப்பான், ஆஸ்திரிரேலியா, இந்தியா, தென் கொரியா என விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகள் மட்டுமே அமெரிக்கா சப்போர்ட். அதிலும் இந்தியா இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் ரஷ்யாவை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். அப்படி நடந்தால் ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், எண்ணெய் போன்றவற்றை குறைந்த விலைக்கு வாங்க முடியாது. ரஷ்யாவை எதிரி நிலையில் வைப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான யோசனை அல்ல. எனவே இந்தியா போரில் பங்கேற்காமல் விலகி நிற்கவே வாய்ப்பு அதிகம்.
இருப்பினும் 3ம் உலகப்போர் என்று வந்துவிட்டால் இந்த முறை நிச்சயம் அது அமரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ சாதகமாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications