குறிவைக்கப்படும் கமேனி? "எனக்கு பின் இவர்கள் தான் வழிநடத்தணும்.." 3 பேரை தேர்வு செய்த ஈரான் தலைவர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் மோதல் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் நேரடியாக உள்ளே வந்த அமெரிக்கா, ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது கிட்டதட்ட உலகப் போரையே உருவாக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தான் கொல்லப்பட்டால் அடுத்து ஈரானை வழிநடத்த மூன்று பேரை அயதுல்லா அலி கமேனி தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் திடீரென அமெரிக்கா இப்போது இந்த மோதலில் உள்ளே வந்துள்ளது. ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது இரவோடு இரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இது மற்றொரு உலகப் போரை ஏற்படுத்துமா என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

Iran s Ayatollah Khamenei Lives in Bunker Names 3 Successors

கமேனி

இதற்கிடையே போர் தீவிரமடைந்துவிட்ட நிலையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேக் அப் பிளான்களையும் ஆய்வு செய்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா இந்த மோதலில் தலையிட ஆரம்பித்துவிட்டதால் இது பல மடங்கு மோசமானதாக மாறும் என்றே அஞ்சப்படுகிறது.

ஈரானை வழிநடத்தப் போவது யார்?

குறிப்பாக ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் கமேனியை கொல்லும் திட்டமும் கூட இஸ்ரேலிடம் இருக்கிறது. இஸ்ரேல் அதிகாரிகள் முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதைக் குறிப்பிட்டிருந்தனர். அது குறித்த கேள்விக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட அந்த திட்டத்தை நிராகரிக்கவில்லை. இதனால் அடுத்து கமேனி குறிவைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ஒருவேளை தான் கொல்லப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் கமேனி ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தனக்குப் பிறகு ஈரானை வழிநடத்த கமேனி மூன்று மூத்த மதகுருமார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதுங்கு குழியில் கமேனி

இந்த மோதல் தொடங்கியது முதலே கமேனி பதுங்கு குழியில் தான் வசித்து வருகிறார். மேலும், கமேனி இப்போது எங்கிருக்கிறார் என்பது வெகு சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியுமாம். மேலும், தன்னைச் சுற்றியுள்ள அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் கேமனி முடக்கிவிட்டார். இதன் மூலம் யாருமே அவரை அவ்வளவு சீக்கிரம் தொடர்பு கொள்ள முடியாது.. மேலும், அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க முடியாது. இந்தச் சூழலில் தான் அவர் தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்த 3 பேரின் பெயர்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளாராம்.

மகனுக்கும் வாய்ப்பு?

அவர்கள் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. அதேநேரம் கமேனியின் மகன் மொஜ்தாபாவுக்கும் கூட நாட்டை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. கமேனியை போலவே மொஜ்தபாவும் ஒரு மதகுரு. மேலும், இஸ்லாமியப் புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானவர். அவரே அடுத்து தலைமைக்கு வர வாய்ப்புகள் அதிகம் சொல்லப்பட்டது. ஆனால், கமேனியில் லிஸ்டில் இவரது பெயர் இல்லையாம்.

ஈரானின் முன்னாள் இப்ராஹிம் ரைசி தான் கமேனியின் முதல் சாய்ஸாக இருந்தார். ஆனால், 2024-ல் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததால் வேறு ஆப்ஷன்களை கமேனி ஆலோசித்து வருகிறார். இந்த மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் உலகமே அடுத்து ஈரானில் என்ன நடக்கும் என்பதையே கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+