கழுத்துக்கு வந்த கத்தி.. இரக்கமே காட்டாத இஸ்ரேல்! பாதாள அறையில் குடும்பத்தோடு பதுங்கிய அயதுல்லா?
டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஈரானின் தொலைக்காட்சி அலுவலகம், அரசு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதாள அறையில் குடும்பத்துடன் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், அவரை அழிக்க எங்களால் முடியும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பகுதிக்கு ஆதரவாக இருந்ததாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் கடுமையாக தாக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தங்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் தவறு செய்து விட்டதாகவும், பதிலடி மிக கடுமையாக இருக்கும் என கூறிய இஸ்ரேல் நேற்று ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அப்போது ஈரானின் அரசு தொலைக்காட்சி அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. செய்தி வாசிப்பாளர் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் ஈரானின் தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்பு துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத்துறை அலுவலகம் ஆகியவற்றின் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அவை தரைமட்டமாயின.
குறிப்பாக ஈரான் உளவுத்துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் ஈரானின் மத தலைவரும் உயர்தலைவருமான அயதுல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை அமெரிக்கா தடுத்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அயதுல்லா அலி கமேனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சம் புகுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தலைநகர் டெக்ரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லவிஜானில் அவர் பதுங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரவேல் தாக்குதல் நடத்திய நிலையில் அன்றைய தினமே அயதுல்லா அலி கமேனி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இல்லையென்றால் அணு ஆயுத திட்ட கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். பாதாள அறையில் எவ்வளவு ஆழத்தில் தங்கி இருந்தாலும் அவரை எங்களால் தாக்க முடியும் என இஸ்ரேல் கூறி இருக்கிறது.
ஈரானைப் பொருத்தவரை பிரதமர் இருந்தாலும், திரை மறைவில் ஷியா மத தலைவரான ஆஅயதுல்லா அலி கமேனி தான் ஆட்சி செய்கிறார். அவரை அகற்றி விட்டு மக்களாட்சி அல்லது புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இஸ்ரேல் வியூகம் வகுத்து வருவதாகவும், அதன் காரணமாகத் தான் தற்போது ஈரானுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல் என்கின்றனர் சர்வதேச போர் நிபுணர்கள்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications