கோட்டைவிட்ட இஸ்ரேல்? ஈரானில் உளவு பார்த்த ‛மொசாட்' உளவுத்துறையின் 2 பேர் கைது.. சிக்கியது எப்படி?
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் கடும் மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இருநாடுகள் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானில் நுழைந்து உளவு பார்த்து வந்த இஸ்ரேலின் ‛மொசாட்' பிரிவை சேர்ந்த 2 உளவாளிகளை கைது செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் இருவரும் சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டு மையம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மூலம் சேதப்படுத்தியது. அதேபோல் ராணுவ தளபதிகள், படைப்பிரிவின் தலைவர்கள், அணுசக்தி திட்டத்தில் பணியாற்றி விஞ்ஞானிகள் இறந்துள்ளனர்.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானும் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீதான தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்கியுள்ளது. இப்போதும் இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் உளவுத்துறையான ‛மொசாட்' உளவாளிகள் ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் ‛மொசாட்' உளவுத்துறையை சேர்ந்த 2 உளவாளிகள் ஈரான் வசம் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதாவது, ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் தங்கி எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரித்த புகாரில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரசு சார் ஊடகமான தஸ்னீம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ‛‛மொசாட் பயங்கரவாத குழுவை (இஸ்ரேல் உளவுத்துறையை பயங்கரவாதிகள் என சொல்கின்றனர்) சேர்ந்த 2 பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் ஈரானின் மேற்குப்பகுதியான அல்போர்ஸ் மாகாணத்தில் போலீசாரிடம் சிக்கினர்'' எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இஸ்ரேல் உளவாளிகள் உளவு பணியில் கோட்டை விட்டுனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இவர்கள் 2 பேரும் சந்தேகத்துக்கு இடமாக இருந்த நிலையில் அதுபற்றி அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்துள்ளனர். கைதான 2 பேரிடமும் ஈரான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இன்னும் இஸ்ரேல் அரசு அல்லது இஸ்ரேல் ‛மொசாட்' உளவுத்துறை சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
ஈரான் கதை முடிந்தது? 'Mark 84 பாம்'.. டிரம்ப் வெளியிட்ட போட்டோவால் ஈரான் மக்கள் அலறல்! -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications