"அணு குண்டுகள்.." பெரிதாக திட்டம் போடும் ஈரான்.. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்து! இஸ்ரேல் பிரதமர் பகீர்
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் இதற்குப் பதிலடி தரும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கத் தேவையான அணு குண்டுகளை உருவாக்கி வைக்க ஈரான் முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினர்.
மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மீண்டும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் இந்தத் தாக்குதல்கள் அப்படியே பிராந்திய போராக மாறும் என்று அஞ்சப்பட்டது.
நெதன்யாகு: இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இஸ்ரேலை மொத்தமாக அழிக்க ஈரான் முயல்வதாகவும் இதற்காக அணு குண்டுகளையும் தயார் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, "எங்களை அழிக்க ஈரான் அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணு குண்டை பொருத்த முயல்கிறார்கள்.
ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்து: எங்களுக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த உலகையும் கூட ஈரான் எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம். ஈரான் இப்போது அணு குண்டு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதே எங்களின் முதல் நோக்கம். இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான எங்கள் திட்டங்களை தற்போது என்னால் பகிர முடியாது" என்றார்.
அணு குண்டு: ஈரான் அணு குண்டுகளைத் தயார் செய்து வருகிறது என்பதே பிரதான புகாராகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே வருகிறது. மின்சாரத்திற்காகவே அணு சக்தி திட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் அணு குண்டுகளைத் தயார் செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
அதேநேரம் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி முகமைக்குத் தரும் ஒத்துழைப்பை ஈரான் தொடர்ந்து குறைத்தே வருகிறது. மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்புகளையும் அதிகரித்து வருகிறது. அணு மின் நிலையத்திற்கு பொதுவாக 3 முதல் 5 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் போதும்.
யுரேனியம்: அதேநேரம் ஈரான் வசம் இப்போது இருக்கும் யுரேனியம் சுமார் 83.7% செறிவூட்டப்பட்டதாக இருக்கிறது. அணு ஆயுதங்களை உருவாக்க யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்டத் தேவைப்படும் நிலையில், இதை வைத்துப் பார்க்கும் போதே ஈரான் எதை நோக்கிச் செல்கிறது என்று தெரிகிறது. ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும் சில ஆண்டுகளில் அதை உருவாக்கிவிடும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
குற்றச்சாட்டு: நெதன்யாகு தொடர்ந்து பேசுகையில், "ஈரான் தலைமையிலான தீய சக்திகள் அச்சு நமது நாட்டை அழிக்க முயல்கிறது. பிராந்திய அமைதியைச் சீர்குலைத்து இந்த பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயல்கிறது. இதற்கு நாம் தடையாக இருப்பதாலேயே நம்மை அழிக்க முயல்கிறார்கள். ஏனெனில் ஈரானைப் பொருத்தவரை இஸ்ரேல் வீழ்ந்தால் அதனுடன் பல நாடுகளும் வீழும். மொத்த மத்திய கிழக்குமே தனது கட்டுப்பாட்டில் வரும் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால், இது ஒருபோதும் நடக்காது" என்றார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications