அமெரிக்காவை பழி தீர்க்க.. டெல் அவிவ் மீது ஏவுகணை மழை! ஈரான் தாக்குதலில் நிலைகுலைந்தது இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்க, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தியுள்ளன.

குறிப்பாக இன்று காலை 10.30 மணிக்கு முன்னர் டெல் அவிவின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து இயல்பாக நடந்துக்கொண்டிருந்து. ஆனால் 10.47 மணிக்கு மொத்த சாலைகளும் பிளாக் செய்யப்பட்டிருக்கின்றன.

Iran Tel Aviv Israel

ஏவுகணை தாக்குதல் தொடர்வதற்கு முன்னர் சைரன் ஒலிக்கும். மக்கள் உஷாராகி பதுங்கு குழிக்குள் பதுங்கிவிடுவார்கள். ஆனால், சைரன் ஒலிப்பதற்கு முன்னரே இந்த முறை தாக்குதல் நடந்திருப்பதாக இஸ்ரேல் மக்கள் கூறுகின்றனர். முதல் கட்ட ஏவுகணை தாக்குதலை முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியிருப்பதாகவும் ஈரானிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இஸ்ரேலிலிருந்து, பாதிப்புகளின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

1. Ben Gurian Airport
2 .Biological Investigation Centre
3. Command Centre of IDF

என மூன்று முக்கியமான இடங்களை ஈரான் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரச்சனையின் தொடக்கம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அமெரிக்க உளவுத்துறையிடம் கூட ஆதாரங்கள் கிடையாது. இருப்பினும் மத்திய கிழக்கில் ஈரானின் வளர்ச்சியை கட்டுப்படுத்த இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக தொடர்ந்து ஈரானை தாக்கி வந்திருக்கிறது. கடந்த வாரம் இந்த தாக்குதல் உச்சத்தை எட்டியிருந்தது. ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் போர் தொடங்கியது.

போரின் போக்கு

இரு நாடுகளும் தங்களின் பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில்தான் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியது. ஈரான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது, அமெரிக்கா இந்த போரில் நுழைந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்கா தாக்குதலுக்கான திட்டத்தை தீவிரப்படுத்தியது.

அமெரிக்காவின் தாக்குதல்

இன்று அதிகாலை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி மையங்களின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதலில் அனைத்து அணுசக்தி மையங்களும் அழிக்கப்பட்டுவிட்டது என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தாக்குதல் வெற்றிப்பெறவில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+