இஸ்ரேல் குண்டுமழையில் ஈரான் இழந்தது என்ன? எல்லை தாண்டி தாக்கிய போர் விமானங்கள்.. என்ன நடந்தது?
டெல்அவிவ்: ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் இன்று திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 3 ரவுண்டுகளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் ‛அட்டாக்'கில் ஈரான் இழந்தது என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1ம் தேதி கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் 150க்கும் அதிகமான ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது வான்வெளி தாக்குதலை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் சமாளித்தது.

இதையடுத்து ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தது. அதன்படி இன்று அதிகாலையில் ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது.
ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மொத்தம் 3 ரவுண்டுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை இஸ்ரேல் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் போர் விமானங்கள் ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் இழந்தது என்ன? என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் மொத்தம் 3 ரவுண்டுகளாக போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் தலைநகர் குஜஸ்தான் இளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவ நிலைகளில் குண்டு மழை பொழியப்பட்டுள்ளது. அதேபோல் டெக்ரான் மாகாணத்திலும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களிலும் ராணுவ நிலைகள் உள்ளன. அதேபோல் ஏவுகணை உற்பத்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இதனால் தான் 3 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் குறைந்த பகுதியளவில் ஈரானுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் லிமிடெட் டேமேஜ் என்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகேரி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஈரான் மீதான தாக்குதலை நாங்கள் நிறுத்தி உள்ளோம். ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தான் இன்று பதிலடி கொடுத்துள்ளோம். இந்த பதிலடி தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் நடத்தி உள்ளது. துல்லியமாக இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் வான்வெளி பாதுகாப்பு மையம், ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையங்களை தாக்கி உள்ளோம். மொத்தம் 2 ரவுண்ட்டுகளாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளது. மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம்’’ என கூறியுள்ளார்.
போரின் கோரப்பிடியில் மத்திய கிழக்கு! ஈரான்-இஸ்ரேல் மோதலில் இதுவரை நடந்தது என்ன?
அதேபோல் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஈரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. சமீப மாதமாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இப்போது தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் தகவலின்படி இஸ்ரேல் விமானப்படையின் விமானம் என்பது எங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் பயன்படுத்திய ஏவுகணைகளை தயாரிக்கும் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஏவுகணைகள் இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த 2 தாக்கதல்களின்போது ஈரான் நுற்றுக்கணக்கான ஏவுகணைகளை நேரடியாக இஸ்ரேல் நாட்டை நோட்டை ஏவியது. அதேபோல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு ஈரான் உதவி செய்தது. இதனால் இஸ்ரேல் தொடர்ந்து தற்காப்பு சார்ந்த தாக்குதல்களை நடத்த தயாராக உள்ளது. இதில் எந்த மாற்றும் இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications