இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பும் இஸ்லாமிய நாடுகள்? அமெரிக்காவுக்கும் ஸ்கெட்ச்.. ஈரானின் மாஸ்டர் பிளான்
டெக்ரான்: காசா மீதான போருக்கு நடுவே இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதலை தொடர்ந்து ஏவுகனைக தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தான் இஸ்ரேலை எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் பணியை ஈரான் தீவிரமாக்கி உள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிராகவும் ‛ஸ்கெட்ச்' போடும் பணியை தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி முதல் போர் தொடங்கி நடந்து வருகிறது. ஹமாஸ் மீதான போரை ஈரான் தொடக்கம் முதலே கண்டித்து வருகிறது. இஸ்ரேல் அதனை கண்டுக்கொள்ளாமல் போரை தொடர்ந்து வருகிறது.

இதனால் ஈரான் இன்னொரு திட்டத்தை கையில் எடுத்தது. இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அறிவுரையின்படி ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி அவ்வப்போது தாக்கி வருகிறது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் 32 பேர் வரை பலியாகி உள்ளனர். இதையடுத்து தற்போது இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினர் மாறி மாறி ஏவுகனை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மோதல் என்பது வலுத்துள்ளது.
அதோடு காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை ஹிஸ்புல்லாவை டார்க்கெட் செய்து லெபனான் வரை நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் நாட்டின் தலைவர் (Supreme Leader) அயதுல்லா அலி காமேனி இஸ்ரேலை கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெக்ரானில் நேற்று இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த தூதர்கள் குழுவை அவர் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேலின் தொடர் தாக்குதல் பற்றி அவர் இஸ்லாமிய நாடுகளின் தூதர்கள் குழுவினருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த வேளையில் தான் அயதுல்லா அலி காமேனி கூறியதாவது:
காசாவின் மேற்கு கரை, லெபனான், சிரியாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வெட்கப்பட வேண்டும். இஸ்ரேலின் இந்த தாக்குதல் என்பது போரிடுபவர்களை நோக்கி மட்டும் நடத்தப்படவில்லை. சிறிய குழந்தைகள், சாதாரண மனிதர்களையும் டார்க்கெட் செய்து நடத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் போராளிகளை தாக்க முடியாததால் இஸ்ரேல் குழந்தைகள், பொதுமக்களை தாக்குகிறது. மருத்துவமனை, பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை அடக்க இஸ்லாமிய நாடுகள் அனைத்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். இஸ்ரேல் உடனான பொருளாதார ரீதியிலான உறவுகளை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கைவிட வேண்டும்.
பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய மக்களின் இதயத்தில் நடத்தும் இஸ்ரேல் எனும் புற்றுநோய் கட்டியை நாம் மொத்தமாக அகற்ற வேண்டும். அப்போது தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க ஆதீக்கம் மற்றம் தலையீட்டில் இருந்து நாம் முழுவதுமாக விடுதலை பெற முடியும்'' என்றார்.
ஏற்கனவே ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் பிரச்சனை உள்ளது. தற்போது இஸ்ரேலும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களை தாக்கி வருகின்றனர். முன்னதாக இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி புவாத் ஹுக்ரை என்பவர் கொல்லப்பட்டார். அதன்பிறகும் பல படை தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைகர் டெஹ்ரானில் வைத்து கொன்றது. இந்த கொலையை செய்தது இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்' என கூறப்படுகிறது.இது ஈரானை கொந்தளிக்க செய்தது. அதுவும் ஈரானுக்குள் நுழைந்தே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொன்றதை ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் இஸ்ரேலை சும்மா விடமாட்டோம். நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்து தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இஸ்லாமிய நாடுகளின் தூதர்களுடன் ஈரான் சூப்ரிம் லீடர் அயதுல்லா அலி காமேனி ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications