நிலைமை கைமீறிப்போகுது! எல்லைகளில் நிறுத்தப்பட்ட "காப்பான்கள்"! கண் கொட்டாமல் காத்திருக்கும் இஸ்ரேல்
டெஹ்ரான்: ஈரான் விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில்.. இதற்காக இஸ்ரேல் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி நடத்தும் என்பதால் இஸ்ரேல் மிக கவனமாக எல்லை பகுதிகளை கண்காணித்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் "இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஈரான் பதிலடி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அதிகாரபூர்வமாக போர் அறிவிப்பை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஒரு சில நாட்களில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்கிய நிலையில் அதற்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளதாம். அதன்படி ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம்.
இஸ்ரேல் ரெடியாகிறது
இதையடுத்து இஸ்ரேல் தனது எல்லையில் அயர்ன் டோர்ம்களை நகர்த்தி வருகிறது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது.
முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேல் தடுக்க முடியாது. இதனால் கூடுதல் அயர்ன் டோம்களை இஸ்ரேல் எல்லைக்கு நகர்த்தி வருகிறது.
இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். இதற்காக அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு அமைப்புகளையும் இஸ்ரேல் எல்லையில் களமிறக்கி உள்ளது.
சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த முறை ராணுவ இலக்குகள் + அணு மையங்கள் + எண்ணெய் உற்பத்தி மையங்கள் + முக்கிய தலைவர்கள் என்று எல்லோரையும் குறி வைத்து ஈரானில் இஸ்ரேல் தாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications