அழிவை நோக்கி ஈரான்? கண்சிவந்தபடி டிரம்ப் சொன்ன வார்த்தை.. நிலைமை ரொம்ப மோசம்.. பெரும்படை தயாராம்
வாஷிங்டன்: அமெரிக்கா - இஸ்ரேல் சேர்ந்து நேற்று தொடங்கிய போரில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பெரிய அளவில் இன்று தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் வார்னிங் கொடுத்துள்ளதோடு, இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் படையை வைத்து தாக்குதல் நடத்துவோம் என்று கடும் வார்னிங்கை செய்துள்ளது போரின் வீரியத்தை அதிகப்படுத்தி உள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் காலம் காலமாக உள்ளது. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதனால் புதிய போர் உருவானது.

ஒருபக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் இஸ்ரேல் என்று இருநாடுகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தியதால் ஈரானால் கலங்கிப்போனது. மேலும் ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் இல்லை. இது ஈரானுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஈரானில் மொத்தம் 100 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டெஹ்ரானில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டது. இதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
டெஹ்ரானில் உள்ள தனது அலுவலக இல்லத்தில் வழக்கம்போல் பணி செய்தபோது அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அயதுல்லா அலி கமேனி மரணமடைந்தார்.
இதனால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலை பழிவாங்க துடித்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று தாக்குதல் கடுமையாக இருக்கும். இந்த தாக்குதல் இதுவரை இல்லாத வகையில் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதனால் பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஈரான், அமெரிக்காவுக்கு சொந்தமான விமானபடை தளம், ராணுவ தளம், கடற்படை தளங்களை குறிவைத்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் ஈரானின் இந்த மிரட்டல் இன்னும் பதற்றத்தை கூட்டி உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வார்னிங்கை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், ‛‛இன்று மிக கடுமையாக தாக்கப்போகிறோம் என ஈரான் கூறியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதலாக இது இருக்கும் என ஈரான் சொல்கிறது.
உண்மையில் அவர்கள் அப்படி செய்யாமல் இருப்பது தான் நல்லது. ஏனென்றால் ஈரான் தாக்கினால் பதிலுக்கு முன்பு எப்போதும் இல்லாத பெரும்படையால் நாங்களும் தாக்குவோம். இதனை நினைவில் வைத்து கொள்வதற்கு நன்றி'' என்று மிரட்டி உள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications