"கதிகலங்கிய அரபு நாடுகள்".. ஈரானின் அடுத்த டார்கெட்.. நடுக்கத்தில் அமெரிக்கா - இஸ்ரேல்.. வார்னிங்
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் வார்னிங் செய்துள்ளது. அதோடு பொதுமக்கள் இந்த இடங்களை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் போர் மீண்டும் உக்கிரமாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அமெரிக்கா கடும் கோபமடைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை வலுவாக்கி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்ள முக்கிய வங்கியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் வங்கி மீது அட்டாக்
தலைநகர் டெஹ்ரானில் 'பேங்க் செபா' என்ற வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அந்த நாட்டின் பொதுத்துறை வங்கியாகும். மேலும் ஈரானின் ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் ராணுவ தளவாடங்களுக்கு பணம் அனுப்பப்படுவதாக கூறப்படகிறது. இந்த வங்கியை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வங்கியுடன் இணைந்த நிர்வாக கட்டடம் சேதமடைந்துள்ளது.
ஈரான் கடும் வார்னிங்
இதனால் ஈரான் கடும் சினம் கொண்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் பரபரப்பான வார்னிங்கை கொடுத்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 'காதகம் அல் அன்பியா' என்ற பெயரில் ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபாகரி அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார்.
வங்கிகள் – நிதி நிறுவனங்கள் குறி
இதுபற்றி இப்ராஹிம் ஸோல்ஃபாகரி கூறுகையில், '' ஈரானின் வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பிராந்தியத்தில் (மத்திய கிழக்கு பிரந்தியம்) உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்.
தங்களின் தோல்வியடைந்த பிரச்சாரத்தை தொடர்ந்து பயங்கரவாத அமெரிக்க இராணுவமும், கொடுங்கோல் சியோனிச ஆட்சியும் (இஸ்ரேல்) நாட்டின் வங்கிகளில் ஒன்றை இலக்காக கொண்டு தாக்கி உள்ளது.
மக்களுக்கு வார்னிங்
இது சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி வழக்கத்துக்கு மாறானது. இதனால் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால் பொதுமக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 1,000 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications