"உக்கிரமாக பதிலடி கொடுப்போம்.." இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! பரபர

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் இன்னொரு முறை தாக்குதல் என்ற பெயரில் எதையாவது நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் காசா மக்களை மிக மோசமாகப் பாதித்து இருக்கிறது. இது போதாது என்று இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது.

Iran Warns Israel says that Next Response Will Be At Maximum Level

இஸ்ரேல்- ஈரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை மிகப் பெரியளவில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புடன் அந்த தாக்குதலை இஸ்ரேல் வெற்றிகரமாக முறியடித்தது. இந்தச் சூழலில் இஸ்ரேல் வெள்ளி அதிகாலை பதிலடி கொடுத்துள்ளது. இப்படி மாறி மாறி நடக்கும் தாக்குதல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது

இதற்கிடையே நள்ளிரவில் தங்கள் மீது நடந்த ஏவுகணை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டொல்லாஹியன், இதை இஸ்ரேல் தான் நடத்தியது என்பதற்கு எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை என்றும் அந்த ட்ரோன்கள் தங்கள் நாட்டிலேயே தான் கிளம்பியதாகவும் தெரிவித்தார். மேலும், அது பார்க்க ஏதோ குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களைப் போல இருப்பதாகவும் நக்கலாக தெரிவித்தார்.

விசாரித்து வருகிறோம்: ஈரானுக்குள் இருந்து கிளம்பிய அந்த ட்ரோன்கள் புறப்பட்டு சில நூறு மீட்டர்களில் கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இத்தாக்குதலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்ற அவர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மீது வான் பாதுகாப்பு மூன்று ட்ரோன்களைத் தாக்கியதால் மட்டுமே சிறியளவில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஈரான் ஊடகங்கள் கூறுகின்றன. இதை ஊடுருவல்காரர்கள் நடத்திய தாக்குதல் என்றே ஈரான் ஊடகங்கள் கூறுகின்றன. இஸ்ரேல் என்ற பெயரைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை.

பதிலடி மோசமாக இருக்கும்: இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் தாக்குதல் என்று வேறு எதையாவது நடத்த விரும்பினால் அல்லது ஈரானின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டால், எங்கள் பதிலடி அதிகபட்சமாக இருக்கும்" என்று அவர் சரமாரியாகச் சாடினார்.

ஈரான் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். இருப்பினும், ஈரானின் முக்கியமான தளங்கள் எங்கும் அவை பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றே ஈரான் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

என்ன பிரச்சினை: கடந்த ஏப்ரல் முதல் வாரம் சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் ஈரான் தளபதி உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதலை அவர்கள் தான் நடத்தியதாகக் கூறிய ஈரான் கடந்த சனிக்கிழமை மிகப் பெரியளவில் பதிலடி கொடுத்தது. இருப்பினும், இஸ்ரேல் அந்தத் தாக்குதலை முறியடித்துவிட்டது.

அதேநேரம் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் போராக வெடிக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அவர்கள் இதையே தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்கள்.. இந்தச் சூழலில் தான் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படி மத்திய கிழக்கில் இருக்கும் இரு முக்கிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+