இஷ்டத்துக்கு தாக்கும் இஸ்ரேல்..குறுக்கே அமெரிக்கா! வேற மாரி ஆகிடும்.. எச்சரித்த ஈரான்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ’தாட்’ ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனவும், தங்களது வான் பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

israel iran war iran us

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது. ஹசன் நஸ்ரலாவின் மரணம் மத்திய கிழக்கு பகுதியில் பதட்டமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் ஈரான் ராணுவ தளபதியான அப்பாஸ் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்தது.

இந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் வான் பரப்பில் நட்சத்திரங்கள் போல ஏவுகணைகள் பறந்து வந்து அந்நாட்டில் விழுந்தது. நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. அதே நேரத்தில் தங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் ஈரான் கூறி இருந்தது.

இன்றலையில் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்திருந்தார். குறிப்பாக ஈரானின் எண்ணெய் உற்பத்தி மையங்கள், மின் விநியோக கட்டமைப்புகள், அணு ஆயுதத் தளங்கள் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நாடுகளில் வான் எல்லைகள் வழியாக ஈரான் தாக்குதல் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சவுதி அரேபியா அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் இருந்து ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் ஈரனுடன் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் போரில் ஈடுபடும் நிலையில் பதிலடி கொடுக்க ஈரானும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ”thaad' என்ற மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வழங்கி உள்ளது. இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தும் என பென்டகன் கூறி இருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் கடும் சேதத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என ஈரான் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,” இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் வரும் காலங்களில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக தங்கள் நாடுகளின் வான் பரப்பை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+