துபாயும், இஸ்ரேலும் காலி ஆகிவிடும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஈரான்.. என்னவெல்லாம் நடக்குமோ?!

துபாய் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: துபாய் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா இடையிலான சண்டை உலக நாடுகளுக்கு இடையிலான போராக மாற வாய்ப்புள்ளது. இதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான்

ஈரான்

இந்த நிலையில் ஈரான் பாதுகாப்பு படையின் ஒரு படை பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தங்களுடைய அடுத்த கட்ட திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரான் தங்களுடன் முதற்கட்ட தாக்குதலை தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் செயலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்துவிட்டோம்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் மீண்டும் நாங்கள் தாக்குவோம். அமெரிக்கா தாக்குதலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மொத்தமாக ஈராக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வேண்டும். அதுவரை நாங்கள் தாக்குதல் நடத்துவோம்.

துபாய்

துபாய்

அதேபோல் அமெரிக்காவிடம் நட்பாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம். அமீரகத்தில் இருக்கும் துபாய், இஸ்ரேலில் இருக்கும் ஹைபா என்ற நகரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் அமெரிக்க படைகள் இருக்கிறது.

இஸ்ரேல் கதை

இஸ்ரேல் கதை

இங்கு இருக்கும் அமெரிக்காவின் படை தளத்தை தாக்கி அழிப்போம். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஈரான் கூறியுள்ளது. இதனால் தற்போது ஈரான் இஸ்ரேலிலும் போர் பதற்றம் தொற்றி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+