ரெட் லைனை தாண்டினால்.. கையை வெட்டுவோம்! டிரம்புக்கு அதிரடி வார்னிங் கொடுத்த ஈரான்!
தெஹ்ரான்: ஈரானில் தற்போது உள்நாட்டு பிரச்சனைகள் அதிகரித்திருக்கின்றன. ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், உள்நாட்டு பிரச்சனையில் தலையிட ரெட் லைனை தாண்டினால் கையை வெட்டுவோம் என்று ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
என்னதான் ஈரான் ராணுவ ரீதியில் பலமிக்க நாடாக இருந்தாலும், அந்நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி, ஆட்சி அதிகாரத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்திருக்கின்றன.

ஈரானின் கரன்சியான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மறுபுறம் விலைவாசி விண்ணை முட்டியிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை சுமார் 70% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஈரானில் பட்டினி பஞ்சம் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வரி அதிகரிப்பு, வாடகை உயர்வு காரணமாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
இறக்குமதி செலவு அதிகரித்ததால், தற்போது ஈரான் நெருக்கடியில் நின்றுகொண்டிருக்கிறது. எனவே இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியிலும் பரவியிருக்கிறது. பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். சர்வாதிகாரி மற்றும் மத குருக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் தீர்வு காண தயாராக இல்லாத அரசு, மரண தண்டனைகளை இரட்டிப்பாக்கியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக பேசுபவர்களை கொன்று வருகிறது.
இங்குதான் டிரம்ப் உள்ளே வந்தார். அதாவது, "போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை கையில் எடுத்தால், மக்களை காக்க அமெரிக்கா பிரச்சனையில் தலையிடும். அமைதியான வழியில் போராடுபவர்களை கொன்று குவித்தால் அதை தடுக்க அமெரிக்கா உள்ளே நுழையும்" என்று கூறியிருந்தார்.
வியட்நாம் போரில் 30 லட்சம், ஈராக் போரில் 10 லட்சம், ஆப்கன் மோதலில் 2 லட்சம், கொரிய போரில் 30 லட்சம் உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா, ஈரானில் நடக்கும் ஒன்றிரண்டு உயிரிழப்புகளுக்காக கவலைப்படுகிறதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் அலி ஷாம்கானி டிரம்புக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
"ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. இதை மீறி வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விஷயத்தில், பாதுகாப்பில் தலையிட நினைத்தால் அவர்களின் கை துண்டிக்கப்படும். ஏண்டா இந்த கோட்டை தாண்டினோம் என்று வருத்தப்படும் அளவுக்கு பதிலடி இருக்கும்" என்று எச்சரித்திருக்கிறார்.
அதேபோல, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்காவின் தலையீடு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த விவாதங்கள் தற்போது மத்திய கிழக்கில் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications