Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் கண்முன்னே தூக்கிலிடப்படும் 26 வயது இளைஞர்.. ஈரான் போட்ட அதிரடி உத்தரவு.. உலக நாடுகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானுக்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் தான் அரசுக்கு எதிராக கடந்த 8 ம் தேதி போராட்டம் நடத்திய 26 வயது இளைஞரை இன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக அவரை அவரது குடும்பத்தினர் 10 நிமிடம் மட்டுமே சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ள நிலையில் அந்த நபர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ஈரானில் உயர்மட்ட தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 28 ம் தேதி தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. தீப்பந்தத்தை கையில் ஏந்தி பொதுமக்கள் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ஈரான் அரசு பாதுகாப்பு படையை வைத்து முடக்க நினைக்கிறது. இருப்பினும் மக்கள் விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அயதுல்லா அலி கமனேியின் கீழ் உள்ள ஈரானின் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. மேலும் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராடிய வழக்கில் சிக்கி ஈரானின் 26 வயது எர்ஃபான் சுல்தானிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட உள்ளார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூக்கிலிடப்பட உள்ள எர்ஃபான் சுல்தானியை அவரது குடும்பத்தினர் கடைசியாக பார்க்க விருப்பம் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்துக்கு வெறும் 10 நிமிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் எர்ஃபான் சுல்தானி அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தினார். கடந்த 8 ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் தான் அவர் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டு உள்ளது, எந்த சட்டத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி குடும்பத்துக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது தூக்கு தண்டனை என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பது கடவுளுக்கு எதிரான பகை உணர்வை தூண்டும் செயல் என்று ஈரான் அரசு அறிவித்து இருந்தது. அதனை மீறி மற்றவர்களை போல் எர்ஃபான் சுல்தானி போராடிய நிலையில் தற்போது அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய எர்ஃபான் சுல்தானிக்கு ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஈரானின் இந்த நடவடிக்கையை கண்டிக்க தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+