ஈராக் உள்நாட்டுப் போர்: பாக்தாத்திலிருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா
பாக்தாத்: ஈராக்கில் அதிகரித்து வரும் பதட்டமான சூழ்நிலையையடுத்து தனது தூதர ஊழியர்களை பாக்தாத்திலிருந்து ஜோர்டானுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதலை தொடங்கினர். ஈராக்கின் மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா உள்ளிட்ட முக்கியமான நகர்களை கைப்பற்றிய அவர்கள், தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் கைப்பற்றிய நகரங்களை மீட்கவும் அரசுப்படைகள் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும் இந்த உள்நாட்டு போரில் தீவிரவாதிகளின் கையே ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அங்கு சண்டை நடைபெறுவதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அதன்படி அங்கு வசித்து வந்த சன்னி பிரிவினர் ஈராக்கின் கிழக்கு பகுதியிலும், ஷியா பிரிவினர் மேற்கு பகுதியிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனால் ஈராக்கில் உள்ள தங்கள் நாட்டு தூதரக ஊழியர்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனது 60க்கும் அதிகமான ஊழியர்களை பாக்தாத்திலிருந்து ஜோர்டானுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா. அதேபோல், சில தூதர ஊழியர்களை ஈராக்கில் உள்ள மற்ற நகரங்களான பஸ்ரா மற்றும் எர்பிட்டுக்கு செல்லவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
பாக்தாத்தில் தான் சுமார் ஐந்தாயிரம் ஊழியர்களைக் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய தூதரகத்தை அமெரிக்கா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications