Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் எடையை குறைக்கனுமா?.. ஜஸ்ட் 30 நாள்.. ‛நோ டயட்’.. பீட்சாவே போதும்.. சாதித்து காட்டிய நபர்! ஆஹா

உடல் எடையை குறைக்க பலரும் போராடி வரும் நிலையில் டயட் என்ற பெயரில் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் ஒருவர் 30 நாளாக பீட்சா சாப்பிட்டு உடல் எடையை வியக்க வைக்கும் வகையில் குறைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டப்ளின்: இந்தியா உள்பட உலகம் முழுவதும் உடல் எடையை குறைக்க பலரும் போராடி வருகின்றனர். இதனால் அவர்கள் டயட் வகை உணவுகளை பின்பற்றி சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் டயட் உணவுகளுக்காக பிடித்த உணவுகளை தியாகம் செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் தான் பிடித்த உணவான பீட்சாவை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு உடல் எடையை கணிசமாக குறைத்து 32 வயது நபர் மாஸ் காட்டியுள்ளார். இவரது போட்டோ தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருவதோடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பீட்சா சாப்பிட்டே வெறும் 30 நாளில் அவர் உடல் எடையை குறைத்தது எப்படி? என்பதன் பின்னணியில் உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போதைய சூழலில் பெரும்பலான ஆண், பெண் என இருவரும் தங்களின் உடலை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் பருமனை தடுக்க தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

இதில் 2 வகையினர் உள்ளனர். ஒருதரப்பினர் உடற்பயிற்சியை தினமும் வழக்கமாக செய்து வருகின்றனர். இன்னொரு தரப்போ தங்களின் உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் நாட்களை குறிப்பிட்டு தீவிர டயட்டை பின்பற்றி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர்.

டயட் உணவால் சிரமம்

டயட் உணவால் சிரமம்

இதில் 2ம் வகையை சேர்ந்தவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுகளை கூட அளவிட்டு உண்ணும் முறையை பின்பற்றி வருகின்றனர். பிடித்த உணவான பிரியானி உள்ளிட்ட அசைவ உணவுகளை விலக்கிவிட்டு கட்டுமஸ்தான உடலை பெறும் நோக்கத்தில் அதற்கான பிரத்யேக உணவை மட்டும் உண்டு வருகின்றனர். இத்தகைய உணவுகளையும் அவர்கள் எளிதாக சாப்பிடுவது இல்லை. ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி கலோரிகளை கணக்கிட்டு மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய கடினமான டயட் முறையை பின்பற்றுவதே பலருக்கும் சிரமமாக இருப்பதோடு, இன்னும் சிலருக்கு டயட் உணவை பின்பற்றினாலும் கூட உடல் எடையை குறைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது.

30 நாளில் மூன்றரை கிலோ குறைத்த நபர்

30 நாளில் மூன்றரை கிலோ குறைத்த நபர்

இந்நிலையில் தான் ஒருவர் வெறும் 30 நாள் டயட்டை பின்பற்றி மூன்றரை கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலருக்கும் சாத்தியம் என்றாலும் கூட டயட் காலத்தில் அவர் சாப்பிட்ட உணவு தான் தற்போது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம், 30 நாளும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையிலும் பீட்சா சாப்பிட்டே ஒருவர் தனது உடல் எடையை 30 நாளில் மூன்றரை கிலோ வரை குறைத்து அசத்தி உள்ளது. பீட்சா பலருக்கும் பிடித்த உணவாக உள்ள நிலையில் உடல் எடையை குறைக்க முயன்றால் அதனை சாப்பிடுவதை கைவிட வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அந்த நபர் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதோடு டயட் உணவாக பீட்சாவையே சாப்பிடலாமா என பலரும் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இந்த கேள்வி உருவாக காரணமான நபர் யார்? வெறும் பீட்சா சாப்பிட்டே உடல் எடையை எப்படி குறைத்தார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

அயர்லாந்து நபர்

அயர்லாந்து நபர்

வடக்கு அயர்லாந்தில் உள்ள பாங்கூரை சேர்ந்தவர் ரியான் மெர்சர். வயது 34. இவர் தனிநபர்களுக்கு உடற்பயிற்சிகளை சொல்லி கொடுத்து வரும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் தான் பலரும் உடல் எடை குறைப்புக்காக டயட் உணவை சாப்பிட முடிவு செய்வதும், அதன் பிறகு அதனை பாதியில் கைவிட்டு பிடித்த உணவுகளை உண்டு உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுவதையும் ரியான் மெர்சர் சமீபகாலமாக பார்த்து வந்தார்.

விழிப்புணர்வுக்காக..

விழிப்புணர்வுக்காக..

இந்நிலையில் தான் சரியான கலோரியில் பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் கூட உடல் எடையை குறைக்கலாம் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க ரியான் மெர்சர் முடிவு செய்தார். அதன்படி அவருக்கு பிடித்த பீட்சாவை ஒரு மாதம் உண்ண முடிவு செய்தார். பொதுவாக புத்தாண்டு தினத்தில் பலரும் உடல் எடையை குறைக்க சபதம் ஏற்பது உண்டு என்பதால் ரியான் மெர்சரும் தனக்கு பிடித்த உணவான பீட்சாவை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

பீட்சா மட்டுமே உணவு

பீட்சா மட்டுமே உணவு

அதன்படி கடந்த மாதம் 30 நாட்கள் ரியான் மெர்சர் காலை, மாலை, இரவு என 3 வேளையும் தனக்கு பிடித்த பீட்சாவை உணவாக எடுத்து கொண்டார். தினமும் 10 துண்டுகள் பீட்சாவை மட்டும் அவர் சாப்பிட்டு வந்த நிலையில் ஒரு மாதத்தில் அதாவது வெறும் 30 நாளில் மூன்றரை கிலோகிராம் (7.7 பவுண்ட்) எடையை குறைத்துள்ளார். இது தற்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலோரி கணக்கீட்டு உணவு சாப்பிட

கலோரி கணக்கீட்டு உணவு சாப்பிட

இதுபற்றி ரியான் மெர்சர் கூறுகையில், ‛‛உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் தங்களுக்கு பிடித்த உணவை கைவிட்டு தவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டேன். இது 2 விஷயங்களை அடிப்படையாக கொண்டது. முதலாவது விஷயம் என்னவென்றால் உடல் எடையை குறைக்க பிரத்யேக உணவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதும், 2வது விஷயமாக சரியான கலோரிகளை கணக்கிட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டு தினசரி உடற்பயிற்சிகை செய்தாலே உடல் எடையை குறைக்கலாம் என்பதை காட்டுவது தான்.

பீட்சா மட்டுமே உணவாக..

பீட்சா மட்டுமே உணவாக..

எனக்கு பீட்சா மிகவும் பிடித்த உணவாகும். இதனால் 30 நாளும் பீட்சா சாப்பிட முடிவு செய்தேன். எனது உடலுக்கு தினமும் தேவையான கலோரிகளை கருத்தில் கொண்டு நானே பீட்சா தயாரித்தேன். தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் பீட்சாக்கள் மட்டுமே சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு 10 பீட்சா துண்டுகளை சாப்பிட்டேன்.திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி கலோரிகளாக 1800-2100 வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகைளில் 2,700 கலோரிகளையும் எடுத்து கொண்டேன். தினசரி புரத அளவு 140 கிராமாக நிர்ணயித்து கொண்டேன். அதோடு தினசரி உடற்பயிற்சிகளை செய்தேன். 30 நாள் முடிவில் என் உடல் மெலிந்து போய் இருந்தது. இணையதளத்தில் என்னை பின்தொடர்பவர்கள் ஆச்சரியாக பார்த்தனர். காரணம் கேட்டபோது நடந்ததை விளக்கினேன். இது பலருக்கும் உத்வேகம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+