ஒரு தீவே உங்க கட்டுப்பாட்டில் தான்.. கட்டணம் இல்லை.. ஜோடிகளுக்கு மட்டும் ஆஃபர்.. எங்கே தெரியுமா
சென்னை: அயர்லாந்தில் உள்ள ஒரு தீவில் ஜோடியாக தங்குவதற்கு சம்பளத்துடன் கூடிய ஆஃபர் ஒன்றை கிரேட் பிளாஸ்கட் தீவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜாலியாக ஊர் சுற்றுவது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அதிலும் ஜோடியாக இருப்பவர்களுக்கு பல இடங்களையும் சுற்றி பார்க்க ரொம்பவே விருப்பப்படுவார்கள். குறிப்பாக கடல் கடந்து தொலை தூர தேசத்தில் போய் சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என பல ஜோடிகளுக்கும் கனவு இருக்கும். ஆனால், அதற்கு அதிக பணம் செலவு ஆகும் என்பதால் அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் உள்ள ஒரு தீவில் ஜோடியாக தங்கலாம்.. கட்டணமே கிடையாது. சொல்லப்போனால் இலவசம் என்பதை விட சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு கண்டிஷன்.. தீவில் உள்ள காஃபி ஷாப் பணி செய்ய வேண்டும்.. சரி பரவாயில்லை.. அழகிய தீவில் இலவசமாக தங்கலாமே என நினைப்பவர்களுக்கே ஒரு ஜாப் ஆஃபரை வெளியிட்டுள்ளது அயர்லாந்தில் உள்ள ஒரு கிரேட் பிளாஸ்கட் தீவு வெளியிட்டுள்ளது.
காஃபி ஷாப்: இது குறித்து அந்த நிறுவனம் தனது வெப்சைட்டில் கூறியிருப்பதாவது:- கிரேட் பிளாஸ்க்ட் தீவில் உள்ள காஃபி ஷாப்பை நடத்துவதற்கு புதிய ஜோடியை நாங்கள் தேடுகிறோம். அங்கேயே தங்க வேண்டும். இந்த தீவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய இயற்கை காட்சிகளை கொண்டு இருக்கின்றன. பூமியின் சொர்க்கம் என்று சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் ரம்மியமான சூழலைக் கொண்டுள்ள இந்த தீவில் காஃபி ஷாப் உள்ளது.
வசதிகள்: இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டுக்க வேண்டும். கெஸ்ட்களை வரவேற்பது, காபி, டீ உள்ளிட்டவற்றை வழங்குவது அவர்களுக்கு தேவையானவைகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகள் இருக்கும். காஃபி ஷாப்பை மொத்தமாக கவனித்துக் கொள்ள வேண்டும். காஃபி ஷாப்பை சுத்தம் செய்வது முதல் வரும் கெஸ்ட்களை வரேவேற்று அவர்களை கவனிப்பது வரை அனைத்து பணிகளும் இருக்கும்.
காஃபி ஷாப் மேல் பகுதியில் இருக்கும் மெயின் பெட்ரூமில் தங்கிக் கொள்ளலாம். அதனால்தான் ஜோடியாக இந்த வேலைக்கு ஆட்களை நாடுகிறோம். காஃபி ஷாப் கிட்சன் முதல் டாய்லட் வரை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். லாண்டரிகளை வாங்குவதற்கு ஊழியர்கள் வந்து விடுவார்கள் உணவு தேவைப்பட்டால் தினமும் டெலிவரி செய்யப்படும்.
இலவச அனுமதி: ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய பிசி மாதங்களில் ஒன்று அல்லது 2 தன்னார்வ உதவியாளர்கள் வருவார்கள். அவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் தூங்கி கொள்வார்கள். என தீவில் பணி புரிவோருக்கான வேலைகள் மற்றும் சலுகைகள் பற்றி பெரிய பட்டியலையே அந்த நிறுவனம் போட்டு வைத்துள்ளது.
ஆனால், சம்பளம் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஊதியம் வழங்கப்படும் என்று போட்டு வைத்துள்ளார்கள். அழகிய தீவில் ஜோடியாக தங்குவதற்கு இலவச அனுமதியுடன் ஊதியமும் தருகிறார்களே என நெட்டிசன்கள் பலரும் கருத்துக் கூறி கிரேட் பிளாஸ்கட் தீவு வெளியிட்ட அறிவிப்பை வைரலாக்கி வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications