"அது" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

இம்ரான்கான் சொந்த கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் இம்ரான்கான் , நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என்று தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    Imran Khanஐ வீழ்த்திய Pakistan Army! என்ன நடந்தது? | OneIndia Tamil

    பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி என அந்த நாடு சிக்கி கொண்டுள்ளது.

    இதற்கு அடிப்படை காரணம், பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகள்தான் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வந்தனர்.

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    குறிப்பாக, இம்ரான்கான் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரியாக கையாளவில்லை என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் இம்ரான்கான் மீது கூறியபடியே இருந்தனர்.. மேலும் தன்னை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து ஜெயிலுக்குள் அடைத்து வரும் இம்ரான்கான் போக்கு குறித்தும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நீடித்தபடியே வந்தன.

    தீர்மானம்

    தீர்மானம்

    ஒருகட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெறுப்பின் எல்லைக்கு வந்துவிட்டன.. அதனால்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர போவதாக செய்திகள் பரபரத்து வந்தன.. தனக்கு எதிராக நெருக்கடிகள் அதிகமாகி கொண்டு வந்தாலும், எக்காரணத்தை கொண்டும் பதவியை விட்டுவிடக்கூடாது என்பதில் இம்ரான்கான் அதிதீவிரத்தை கடைப்பிடித்து வருகிறார்.. இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓபனாகவே சொல்லியும்கூட, அதனை இம்ரான் கான் ஏற்கவில்லை.. மறுத்துவிட்டார்...!

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    அதனால்தான், வேறு வழியில்லாமல், நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் மார்ச் 28-ல் தாக்கல் செய்திருந்தன.. இதன் மீது 2 நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது.. ஆனால், ஓட்டெடுப்பு ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது... இப்போதைக்கு மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது.. இப்போதைக்கு இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் இருக்கிறார்கள். அதேபோல, ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளை சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.

    இம்ரான்கான்

    இம்ரான்கான்

    இதனிடையே, இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.,.. இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.. உண்மையிலேயே இந்த விஷயம் இம்ரான்கானை நிலைகுலைய வைத்து விட்டது.. இப்போது சிக்கல் என்னவென்றால், எதிர்க்கட்சிக்கு 163 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் மெஜாரிட்டியை பெறுவதற்கு வெறும் 9 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்பதுதான்.

    கடிதம்

    கடிதம்

    அதனால்தான், அதிருப்தியில் உள்ள சொந்தக்கட்சிக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இம்ரான்கான் இறங்கி உள்ளார்.. நேற்று தனது கட்சி எம்பிக்களுக்கு இம்ரான்கான் ஒரு லெட்டர் எழுதியுள்ளார்... அதில் "பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஏப்ரல் 3-ல் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும், இதனை அனைத்து எம்பிக்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இதற்கு எத்தனை பேர் செவிசாய்ப்பார்கள் என்று தெரியவில்லை.. ஒருவேளை எதிர்த்து வாக்களித்தால், பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து, உடனடியாக தேர்தல் நடக்கக்கூடும் என்றே தெரிகிறது.. பாகிஸ்தானை பொறுத்தவரை, இதுவரை எந்த பிரதமரும் முழுமையாக 5 வருடங்கள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது என்பது வரலாற்று உண்மை.. இதில் இம்ரான்கான் தப்பிப்பாரா? அல்லது வழக்கம்போல் பதவி பறிபோகுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+